Friday, February 28, 2020

ஆரம்பித்து விட்டார்கள் மீண்டும் வடகலை, தென்கலை குடுமிப் பிடிச் சண்டை

காஞ்சிபுரம் தேவஸ்தானத்தில் வடகலை மற்றும் தென்கலை அய்யங் கார்கள் மோதல் குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற தேவராஜ பெருமாள் என வழங்கப்படும் வரதராஜ பெரு மாள் கோவிலில்  உற்சவத்தின் போது பிரபந்தங்கள் படுவது வழக்கமாகும்.  இந்த பிரபந்தங் களைப் பாடும் அய்யங்கார் வகுப்பினரிடையே வடகலை, தென்கலை என இரு பிரிவுகள் உண்டு.   இந்த பிரபந்தங்களை இரு பிரிவில் யார் பாடுவது என்பது குறித்து கடும் சர்ச்சை நிலவி வருகிறது.
இது குறித்து ஒவ்வொரு உற்சவத்தின் போதும் இந்த சர்ச்சை ஏற்பட்டு இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனதில் இந்த சர்ச்சை கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.    இவர்களிடையே சமாதானத்தை உண்டாக்க காவல்துறை, இந்து அறநிலையத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் எவ்வளவோ முயன்றும் முடியாத சூழல் உண்டாகி வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாகப் பதியப்பட்ட மனுவின் விசாரணையின் போது நீதிமன்றம் தேவராஜ சாமி தேவஸ்தான அதிகாரிக்கு உத் தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.   அந்த உத்தரவில் பிரபந்தம் பாடுவதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே மோதல் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் நிகழ்ச் சியின் போது திருக்கச்சி நம்பித் தெருவில் உள்ள மண்டபத்தில் வேடுபறி என்ற நிகழ்வு நடந்தது. அப்போது அங்கு தென்கலை பிரிவினர் திருமங்கையாழ்வார் பாசுரம் பாட முயன்றனர். அதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.  காவல்துறையினர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
வடகலை மற்றும் தென்கலை இடையே 18 வித்தியாசங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
வடகலை வைணவர்கள் திருமாலையும் லட்சுமி தேவி யையும் சரிசமமான பூஜைக்கு உரியவர்களாக கருதுபவர்கள். அதிக வடமொழி கலாச்சாரம் இருக்கும். தென்கலை வைணவர் களும் லட்சுமி தேவியை வணங்கு வார்கள். ஆனால் திருமாலை மட்டுமே மூல தெய்வமாக வழிபடும் கொள்கையுடையோர். ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு முக்கியத்துவம் தருவோர். திவ்யபிரபந்தம் தென்கலை வைணவர்களுக்கு வேதவாக்கு. இரு தரப்புக்கும் இருக்கும் இந்த வேறுபாடுகள் தான் அடிக்கடி மோதல் ஏற்பட காரணமாக இருக்கிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...