அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலினாவுடன் முதன்முறையாக 2 நாள் பய ணமாக வரும் 24 ஆம் தேதி இந்தியா வருகிறார்.
இவர்களின் இந்திய வரு கையின்போது, குஜராத்
மாநி லத்தின் அகமதாபாத், சபர் மதி ஆசிரமம் உள்பட பல் வேறு பகுதிகளுக்கு
செல் கிறார். டிரம்ப் வருகையை யொட்டி, குஜராத் மாநிலத்தில் பாதுகாப்பு
ஏற்பாடுகள் பலப் படுத்தப்பட்டுள்ள நிலை யில், அவர் கலந்துகொள்ளும்
பகுதிகளில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து
வருகின்றன.
மோடி கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு
சென்றிருந்த போது, அங்குள்ள அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்ற ‘அவுடி
மோடி’ என்ற பிரம் மாண்ட நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப்புடன் அவர் கலந்து
கொண்டார். அப்போது அவ ருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதுபோல,
அதிபர் டிரம்ப்பின் இந்தியப் பயணத்தின்போது, பிரம் மாண்ட வரவேற்பு
நிகழ்ச் சியை அகமதாபாத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக அக மதாபாத் விமான
நிலையம் அருகே உள்ள குடிசைப்பகுதி கள் டிரம்ப் கவனத்தை ஈர்க்காதவாறு, அந்த
பகுதியில் உயரமான சுற்றுச்சுவரை அரசு அமைத்து வருகிறதுஞ் இது பரபரப்பை
ஏற்படுத்தி உள் ளது. 2017-ஆம் ஆண்டு சீன அதிபர் குஜராத் வருகையின் போது
அவர் செல்லும் பாதை யில் உள்ள குடிசைப்பகுதிகளை மறைக்க தார்பாய் கொண்டு
மூடப்பட்டது, ஆனால் தார் பாய்களை கிழித்துக்கொண்டு குடிசைப்பகுதிகளில்
வாழும் மக்கள் சி சிங்பிங்கை வேடிக்கை பார்த்தனர். இந்த நிலையில் மீண்டும்
அதே போன்று அசம்பாவிதம் நிகழ்ந்துவிடக்கூடாது என்ப தற்காக மிகப்பெரிய
அளவில் சுவர் எழுப்பிக்கொண்டு இருக்கிறது பாஜக அரசு.
No comments:
Post a Comment