Monday, February 17, 2020

பெற்றோர்கள் பிறந்த இடம் தெரியாது தடுப்புக்காவல் மய்யத்திற்கு செல்லத் தயார் ராஜஸ்தான் முதல்வர் ஆவேசம்

எனது பெற்றோர்கள் பிறந்த இடம் எனக்கு தெரியாது என்னை தடுப்புக்காவல் மய்யத்திற்கு அனுப்புங்கள் என குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆவேசமாக பேசி னார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு   கூறியதாவது:  பெற்றோரின் பிறப்பிடம் குறித்த தகவல்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) கேட்கப்படுகிறது.
என்னால் விவரங்களை வழங்க முடியாவிட்டால், நானும் ஒரு தடுப்புக்காவல் மய்யத்தில்  வைக்கும்படி கேட்டுக் கொள்வேன். எனது பெற் றோரின் பிறப்பிடம் எனக்குத் தெரியாது. நீங்கள் உறுதியாக இருங்கள், இது போன்ற நிலை வந்தால் நான் முதலில் தடுப்புக்காவல் மய்யம் செல்வேன் என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...