Friday, February 28, 2020

பூமியை சுற்றி வரும் குட்டி நிலவு

'பூமியை, கடந்து மூன்று ஆண்டுகளாகக் குட்டி நிலவு ஒன்று சுற்றி வருகிறது' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா'வின் நிதியுதவியுடன் அரிசோனாவில் செயல்பட்டு வரும் நிறுவனம், 'கடாலினா ஸ்கை சர்வே'. இந்நிறுவனம், விண்வெளியில் உலவும் சிறு கோள்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வியர்ஸ்சாஸ், கூறியுள்ளதாவது:
பூமியை, குட்டி நிலவு ஒன்று சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு, '2020 சிடி3' எனப் பெயரிட்டுள்ளோம். கடந்து மூன்று ஆண்டுகளாக, இந்தக் குட்டி நிலவு பூமியை வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், இதுவரை, இதைக் கண்டறியாமலேயே இருந்திருக்கிறோம். இந்த நிலவு, ஒரு கார் அளவில் உள்ளது.
இது, நம்முடன் நீண்ட காலம் இருக்காது; பூமியுடன் மோதுவதற்கான சாத்தியமும் உண்டு. ஆனால், மிகவும் சிறியதாக இருப்பதால், தரையைத் தொடும் முன், வளிமண்டலத்திலேயே எரிந்து விடும்.
இதற்கு முன், 1991ஆம் ஆண்டு, '1991 விஜி' எனப் பெயரிடப்பட்ட குட்டி கோள் ஒன்று, பூமியை சில ஆண்டுகள் சுற்றி வந்தது. அதேபோல், 2006ஆம் ஆண்டில், இது போன்ற ஒரு விண்கல், பூமியைச் சுற்றி வந்தது. அதற்கு, '2006 ஆர்.எச் 120' என பெயரிடப்பட்டது.
இவை சிறிது காலத்துக்குப் பின், தன் பாதையில் சென்று விட்டனர்.சூரியன், பூமி மற்றும் நிலா ஆகியவற்றின் ஆதிக்கம், குட்டி நிலவின் மீது இருப்பதால், அதன் பாதை எப்போது வேண்டுமா னாலும் மாறுபடலாம்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...