நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் முடிந்து
ஒத்தி வைக்கப்பட் டுள்ள சட்டசபை, மானியக் கோரிக்கை விவாதத்திற்காக, மார்ச்
9இல் மீண்டும் கூடு கிறது.
சட்டசபையில், 2020-2021 ஆம் ஆண்டிற்கான
நிதி நிலை அறிக்கையை துணை முதல்வர் பன்னீர்செல்வம், இம்மாதம், 14ஆம் தேதி
தாக்கல் செய்தார்.இதைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் பேரவைக்கு விடு முறை
விடப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம், 17ஆம் தேதி துவங்கி, 20ஆம்
தேதி வரை நடந்தது.
இதில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய
கேள்விகளுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் பன்னீர்செல்வம்
மற்றும் அமைச்சர்கள் பதில் அளித்தனர். பல்வேறு விஷ யங்கள் குறித்து,
காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
கடைசி நாளில், காவிரி டெல்டா மாவட்டங்களை
பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சிறப்பு சட்டம்
நிறைவேற்றப் பட்டது. இதை யடுத்து, தேதி குறிப்பிடப் படாமல் சட்ட சபையை,
பேரவைத் தலைவர் தனபால் ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், சட்ட சபையின் அடுத்த கூட்டம், மார்ச், 9இல் துவங்கும் என, சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித் துள்ளார்.
சட்டசபை எத்தனை நாட்கள் நடக்கும் என, அறி
விக்கப் பட வில்லை.மார்ச், 2இல், பேரவைத் தலைவர் தனபால் தலைமையிலான அலுவல்
ஆய்வுக் குழு கூடி, சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என, முடிவு செய்யப்பட
உள்ளது.
சட்டசபை கூட்டத் தொடரில், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்க உள்ளது.
இம்முறை, மார்ச், 25 வரை சட்டசபை நடக்கும்
என, கூறப்படுகிறது. கூட்டத் தொடரில், துறை வாரியாக பல்வேறு அறிவிப்புகளை,
முதல்வரும், அமைச்சர்களும் வெளியிட உள்ளனர்; எதிர்க் கட்சிகள் எழுப்பும்
கேள்வி களுக்கும், உரிய விளக்கங்களை அளிக்க உள்ளனர்.
No comments:
Post a Comment