சீனாவின் வுகான் நகரில் தோன்றி நாடு
முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ், நாளுக்கு நாள் அதிகமான உயிர்களை காவு
வாங்கி வருகிறது. அங்கு கடைசியாக வெளியான தக வல்படி 1,665 பேர் இந்த வைர
சுக்கு பலியாகி உள்ளனர். 68 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இதுவரை இந்த வைரஸ்
தொற் றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வைரஸ் தற்போது சீனாவுக்கு வெளியேயும்
வேக மாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியா, அமெ ரிக்கா, ஜப்பான்,
பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்கொ ரியா, மலேசியா என பல உலக நாடுகளை கொரோனா
வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. அப்படி சீனா மற்றும் வெளி நாடுகள் என 69
ஆயிரத்துக் கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டு
உள்ளது.
குறிப்பாக ஹாங்காங்கில் 57 பேர், ஜப்பான்
(டைமண்ட் பிரின்சஸ் கப்பல் பயணிகள் உள்பட 412 பேர்), சிங்கப்பூர் (72),
இந்தியா (3), அமெரிக்கா (15), ஆஸ்திரேலியா (14), பிரான்ஸ் (12),
இங்கிலாந்து (9), கனடா (8), பிலிப்பைன்ஸ் (3) என பல்வேறு நாடுகளில் இந்த
வைரஸ் பரவி வருகிறது. இதில் ஜப்பான், பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், தைவான்
உள்ளிட்ட நாடுகளில் உயிரி ழப்பும் நிகழ்ந்திருப்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment