Monday, February 17, 2020

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் வேலையில்லாதோர் 40 விழுக்காடாக உயர்வு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 34 லட்சமாக உயர்ந் துள்ளது என்ற தகவல் வெளியாகி யுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 21.39% என்பதாக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கையில்12.5 லட்சம் கூடி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநில சட்ட சபையில் எழுத்து மூலமாக அளிக் கப்பட்ட பதிலில், அம்மாநில தொழிலாளர் துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா இத்தகவலை தெரிவித்தார்.
இந்தாண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முடிவடைந்த காலத்தில், தொழி லாளர் துறையின் மூலம் நடத் தப்பட்ட ஆய்வில் பதிவான விபரங் களின் அடிப்படையில், மாநிலத்தில் வேலையில்லாதேர் எண்ணிக்கை 33.93 லட்சம் என்பது தெரிய வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வகையில், கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பாக இருந்த நிலைமையை ஒப்பிடுகையில், மாநி லத்தில் வேலையில்லாதேர் எண் ணிக்கை 60% கூடியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. அதேசமயம், வேலையில்லாதோர் எண்ணிக்கை இந்தளவு அதிகரித்ததற்கான கார ணம் அமைச்சரின் பதிலில் அடங்கியிருக்கவில்லை. அதேசமயம், மாநி லத்திற்கு எதிர்பார்த்த முதலீட்டு திட்டங்கள் எதுவும் வரவில்லை என்ற பொதுவான காரணம் கூறப் படுகிறது.
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்த வரை 10 நபர்களில் 4 நபர்கள் வேலையில்லாத நபர்களாக இருந்துவருகின்றனர்.
ஆயிரம் குடும்பங்கள் அடங்கிய ஊரில் 400-க்கும் அதிகமான குடும் பங்களைச் சேர்ந்தவர்கள் வேலையின்றி இருக்கின்றனர்.
ஒரு மாநிலத்தில் வேலையில் லாதோர் விகிதம் 10 விழுக்காட்டை கடந்தாலே அது அபாயக் கட்டத்தை தாண்டியது என்று பொருள்படும் ஆனால் உத்தரப் பிரதேசத்தில் இந்த விகிதம் 40 விழுக்காடாக  உயர்ந் துள்ளதால் உச்சக்கட்ட அபா யத்தைப் பெற்றுள்ளது, சாமியார் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த காலத்தில் இருந்தே உத்தரப் பிரதேசத்தில் எந்த ஒரு புது தொழிலும் தொடங்கப்படவில்லை. முதலீடுகளும் மாநிலத்திற்கு கிடைக் கவில்லை.
வேலையின்மை அபாய கட் டத்தை தாண்டியிருந்த போதும்  மோடியும் மாநில முதல்வர் சாமி யார் ஆதித்யநாத்தும் ராமனுக்கு பிரமாண்ட கோவில் கட்டவும், மாநிலத்தில் ஆங்காங்கே பாஜக தலைவர்களின் பிரமாண்ட சிலை களை வைக்கும் திட்டங்களை தொடர்ந்து அறிவித்து  வருகின் றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...