Monday, January 6, 2020

மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வர வேண்டிய நிதி குறைப்பு

ஜி.எஸ்.டி. வரி வருமானத்தில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்கு அளிக்காமல் தவறாக எடுத்துச் சென்றது மத்திய அரசு

ஆளுநர் உரையில் நிதிநிலை பற்றிய கருத்து


மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு  குறைத்துள்ளதாக ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டப் பட்டது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் இன்று  (6.1.2020) உரை யாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
இந்த அரசு திறமையான நிதி மேலாண்மைக்கு அதிமுக்கியத் துவம் அளித்து வருகிறது. பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும் நிதிநிலை வரம்புகள் மீறாமல் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி குறைந்துள்ளது. மத்திய அரசிடமிருந்து மாநிலங் களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக் கீட்டை, பதினான்காவது நிதிக்குழு வின் பரிந்துரைகள் அதிகரித்துத் தந்துள்ளன என்ற பரவலான கருத்து உள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் மொத்த நிதியளவு குறைந்துள்ளது என்பதே உண்மை நிலவரமாகும். மேலும், பதினான் காவது நிதிக்குழு பரிந்துரைத்த, மாநிலங்களுக்கு இடையிலான மத்திய வரிகளின் பகிர்வு வழிமுறை தமிழ்நாட்டிற்கு மேலும் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத் தியுள்ளது.
பதினைந்தாவது நிதிக்குழுவின் பரிந்துரைகளை தமிழ்நாடு மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. இந்த அரசு, நிதிக்குழு முன்பு தனது கருத்துகளை விளக்கமாகச் சமர்ப் பித்துள்ள நிலையில், மாநில அரசு களின் செயல்திறனையும் செயல் பாட்டையும் ஊக்குவிக்கும் வகை யில், நியாயமான மற்றும் சமமான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது.
தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு, இதுவரை பொருட்கள் மற்றும் சேவை வரி இழப்பீடாக 7,096 கோடி ரூபாயை பெற்றுள்ளது. மேலும், மத்திய அரசின் மானியமாக, 17,957.31 கோடி ரூபாய் இந்த ஆண்டில் இதுவரை பெறப்பட்டுள் ளது. இருப்பினும், தமிழ்நாட்டிற் கான நிலுவைத் தொகைகளை விடுவிப்பதில் நிலவி வரும் சில சிக்கல்களைக் களைந்து நிலுவைத் தொகையினைப் பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. பொருட்கள் மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்திய முதலாவது ஆண்டில், அதாவது 2017-18 ஆம் ஆண்டில், பல்வேறு மாநிலங்களில் வசூலிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவை வரியில், ஒதுக்கீடு செய்யப்படாத தொகையான 88,344.22 கோடி ரூபாயிலிருந்து 50 சதவீதத்தை , மாநில பொருட்கள் மற்றும் சேவை வரி வசூல் அடிப் படையில் வழங்குவதற்குப் பதிலாக, மத்திய அரசு தனது தொகுப்பு நிதிக்கு தவறாக எடுத்துச் சென்று விட்டது. மேலும், பதினான்காவது நிதிக் குழுவின் நிதிப்பகிர்வு முறையின்படி, இத்தொகையில் 42 சத வீதம் மட்டுமே மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டது. இதன் விளைவாக, தமிழ்நாட்டிற்கு 4,073 கோடி ரூபாய் நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலுவைத் தொகையை நமது மாநிலத்திற்கு விரைவாக விடுவிக் குமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் முயற்சியின் பலனாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, பொருட்கள் மற்றும் சேவை வரி மன்றத்தால் அமைச்சர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையில், சாதகமான முடிவை விரைவாக நாங்கள் எதிர்பார்க்கிறோம். மாநிலங்களின் நலன்களை முறையாகப் பாதுகாப் பதில் மிகுந்த முனைப்பினைக் காட்டும் இந்த அரசு, பல்வேறு மன்றங்களிலும், உயர்மட்ட நிலை யிலும், இத்தகைய பிரச்சினைகள் தொடர்பான தனது கருத்தினை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள் ளது. தமிழ்நாடு அரசுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகைகளை விரைவில் விடுவிக்குமாறு மத்திய அரசை மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...