காஷ்மீரில் ஆபாசப்படங்களை பார்க்க இணையம் பயன்படுத்தப்படுவதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. சரஸ்வத் கூறி உள்ளார்.
திருபாய் அம்பானி தகவல் மற்றும் தொலைத்
தொடர்பு தொழில்நுட்ப கல்வியக பட்டமளிப்பு விழாவில் டில்லி ஜவகர்லால் நேரு
பல்கலைக்கழக துணைவேந்தரும், நிதி ஆயோக் உறுப்பினருமான வி.கே.சரஸ்வத்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது சரஸ்வத் இடம் செய்தியாளர்கள்
கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
வி.கே.சரஸ்வத், தனது பதிலில் “காஷ்மீர்
மாநிலத்துக்குச் செல்ல ஏன் அரசியல்வாதிகள் விரும்புகின்றனர்? அவர்கள்
டில்லி சாலையில் நடக்கும் போராட்டங்களை காஷ்மீரிலும் நடத்த
விரும்புகின்றனர். அவர்கள் சமூக ஊடகங்களை தங்கள் போராட்டத்துக்கு உதவியாக
பயன்படுத்தி வருகின்றனர். எனவே அவர்களுக்கு இணையச் சேவை இல்லை எனில்
பயன் ஏதும் இல்லை.
காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கு
இணையத்தின் தேவை எதற்குத் தெரியுமா? அவர்கள் இணையத்தை எதற்குப்
பயன்படுத்துகின்றனர் என்பது தெரியுமா? அவர்கள் இணையத்தை ஆபாசப்படம்
பார்க்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். வேறு எதற்கும் அவர்கள் அதைப்
பயன்படுத்துவது கிடையாது. எனவே அங்கு இணையச் சேவை இல்லாததால்
பொருளாதாரத்தில் எவ்வித மாற்றமும் உண்டாகப் போவதில்லை என நான் கூறுகிறேன்.
காஷ்மீரில் இணையச் சேவை முடக்கப்பட்டது.
ஆனால் அந்த சேவை குஜராத்தில் உள்ளதா? காஷ்மீரில் இணையச் சேவை முடக்கம்
என்பதே வேறு. காஷ்மீரில் விதி எண் 370 நீக்கப்பட்டு காஷ்மீரை முன்னேற்ற
விரும்பும் போது இது போலச் சேவைகளைப் பயன்படுத்தி சட்டம் ஒழுங்கை
சீர்குலைப்பவர்கள் அதிகம் உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக் கழகத் துணைவேந்தர் மட்டுமல்ல;
நிதி ஆயோக் உறுப்பினர் என்னும் மிக முக்கிய பொறுப்பு களில் உள்ளவர்களின்
தரம் எந்த நிலையில் உள்ளது என்பதற்கு இந்த சரஸ்வத் கூற்றும், கருத்தும்
போதாதா?
பிஜேபி சட்டப் பேரவை உறுப்பினர்கள்
கருநாடக மாநில சட்டப் பேரவையில் என்ன செய்தார்கள்? கைப்பேசியில் அவர்கள்
ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்ற செய்தி அப்பொழுது
பெரிதாகப் பேசப்பட்டது மறந்து விட்டதா?
கார்ப்பரேட்டுகளிடம் பணம் வாங்கிக்
கொண்டு அவர்களுக்காக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட வர்கள் பட்டியலில்
பிஜேபியினர் முதல் இடத்தில் இருந்த தகவல்கள் எல்லாம் வெளிவரவில்லையா?
ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ளவர்கள்
இணையதளங்களில் ஆபாசப் படங்கள் பார்க்கின்ற னர் என்பது நம்பத் தகுந்ததா?
காஷ்மீர் என்றாலே இவர்கள் கருதுவது முஸ்லிம்கள் என்பதுதான். உடனே அவர்கள்
மீது பழி போட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிப் பொங்குகிறது. குஜராத் கல
வரத்தின் போது கூட அன்றைய முதல் அமைச்சர் (இன்றைய பிரதமர்
நரேந்திரமோடி என்ன பேசினார்?
அகதிகள் முகாம்களில் முஸ்லிம் மக்கள்
பெருக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டி
ருக்கிறார்கள் என்ற சொல்லவில்லையா? இந்த வெட்கம் கெட்ட ஆபாச - ஆரிய
அட்டகாச அதிகார ஆட்சி என்று ஒழியுமோ!
No comments:
Post a Comment