புதுடில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த கும்பல் பல்கலைக்கழக மாண வர்கள், ஆசிரியர்கள் மீது தாக் குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தாக்குதலில் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் உள்ளிட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
அய்ஷி கோஷ்
மண்டை உடைந்தது
இந்த தாக்குதலின் பின்னணி யில்,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி
பரிஷத்தின் உறுப்பினர்கள் இருப்பதாக ஜே.என்.யு. மாணவர் சங்கம் கூறி
யுள்ளது. வன்முறை கும்பல் மாண வர்களையும் ஆசிரியர்களையும் குறிவைத்து
தாக்குதல் நடத்திய தாக பல்கலைக்கழகத்தின் ஆசிரி யர்கள் தெரிவித்தனர்.
"காவல்துறையினரின் முன்னி லையிலேயே
ஏபிவிபி-யினர் தடிகள், இரும்பு கம்பிகள், சுத்தியல்களை எடுத்துக்கொண்டு
முகங்களை முகமூடி அணிந்து மறைத்துக் கொண்டு சுற்றி வருகின்றனர். அவர்கள்
செங்கற்களை வீசு கிறார்கள். சுவர்கள் மீது விடுதி களில் உள்ள மாணவர்களை
அடிக்கிறார்கள். இந்த தாக்குதலில் பல ஆசிரியர்களும் மாணவர்களும்
தாக்கப்பட்டுள்ளனர். இதில் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலை வர் அய்ஷி கோஷ்
கொடூரமாக தாக்கப்பட்டு அவரது தலையில் மிகவும் மோசமாக இரத்தப்போக்கு
ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் அவர்களின் குற்றங்களுக்கு உடந்தையாக
இருக்கும்போது மாணவர்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்
கின்றனர். தாக்கும் போது ஆயுதங் களுடன் இருந்த முகமூடி அணிந்த வர்கள் பாரத்
மாதா கி ஜெய் என்று கூச்சலிட்டுக் கொண்டே அடித்தனர்" என்று ஜே.என்.யு.
மாணவர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜே.என்.யு.வில் ஏற் பட்ட
வன்முறையைத் தொடர்ந்து, ஜே.என்.யு.வின் முன்னாள் மாண வர் தலைவர் ஷெஹ்லா
ரஷீத், பிரதமர் நரேந்திர மோடியை சுட்டுரையில் குறிப்பிட்டு, அன் புள்ள
உங்கள் ஏபிவிபி குண்டர்கள் ஜே.என்.யு.வில் உள்ள மாணவர் சங்கத்தின்
தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அலுவலக பொறுப்பாளர் களை தாக்குகிறார்கள். உங்கள்
கட்சிக்கு அவமானம் ஏதாவது எஞ்சியிருக்கிறதா? என்று கடுமை யாக கேள்வி
எழுப்பியுள்ளார்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
ஜே.என்.யு. வன்முறை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள் ளார். "ஜே.என்.யு.வில்
நடந்த வன் முறையை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைகிறேன். மாண வர்கள்
கொடூரமாக தாக்கப்பட்ட னர். காவல்துறையினர் உடனடி யாக வன்முறையை நிறுத்தி
அமைதியை மீட்டெடுக்க வேண் டும். பல்கலைக்கழக வளாகத்திற் குள் நமது
மாணவர்கள் பாது காப்பாக இல்லாவிட்டால் நாடு எவ்வாறு முன்னேறும்? என்று அவர்
கருத்து தெரிவித்துள்ளார்.
ஜே.என்.யு. வன்முறையின் கணினி காட்சியை
சுட்டுரை செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்
சீதாராம் யெச்சூரி, சட்டத்தை அமல்படுத்தியவர்கள் முகமூடி அணிந்தவர்கள்
ஜே.என்.யு-வுக்குள் நுழைந்தனர். இந்த காணொலி போன்று தான் ஆர்.எஸ்.எஸ் /
பி.ஜே.பி இந்தியாவை மாற்ற விரும்புகிறது, அவர்கள் வெற்றி பெற அனுமதிக்கப்பட
மாட் டார்கள் என்று சுட்டுரை செய் துள்ளார்.
யோகேந்திர யாதவ், ஜே.என். யு.வுக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் டில்லி காவல்துறை யால் தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
முகமூடி குண்டர்களால் ஜே.என்.யு.
மாணவர்கள், ஆசிரி யர்கள் மீது கொடூரமான தாக் குதல் நடத்தப்பட்டுள்ளது. பலர்
பலத்த காயமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் தேசத்தை
கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாசிஸ்டுகள், நம் முடைய துணிச்சலான மாணவர்
களின் குரல்களுக்கு பயப்படு கிறார்கள். ஜே.என்.யுவில் இன் றைய வன்முறை அந்த
அச்சத்தின் பிரதிபலிப்பாகும். என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment