லித்தியம் அயனி மின்கலன்கள் இன்றி எதுவும்
இயங்காது என்ற நிலை வந்திருக் கிறது. அதேசமயம், லித்தியம் அயனி
மின்கலன்களில் சேர்க்கப்படும் கோபால்ட், நிக்கல் போன்ற உலோகங்கள் மற்றும்
வேதிப் பொருள்கள், சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கின்றன என்ற புகார்களும்
உரத்து ஒலிக்கின்றன.
பிரபல கணினி தயாரிப்பாளரான,
அய்.பி.எம்.,கோபால்ட், நிக்கல் போன்ற உலோகங்கள் இல்லாமல், திறனுள்ள
மின்கலன்களை தயாரிக்க முடியும் என்று அண்மையில் அறிவித்துள்ளது.
இந்த உலோகங்களுக்கு பதிலாக அது
பயன்படுத்தும் மூன்று முக்கியமான வேதிப் பொருட்களை சாதாரண கடல் நீரில்
இருந்தே எடுக்கலாம் என்றும் ஐ.பி.எம்., விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த
மூன்று பொருட்கள் எவை என்பதை அவர்கள் ரகசியமாக வைத்துள்ளனர்.
கடல் நீர் பொருட்களைப் பயன்படுத்தி
னாலும், தங்களது மின்கலன், அய்ந்தே நிமிடங்களில், 80 சதவீதம் மின்னேற்றம்
பெற்றுவிடும் திறன் உடையவை என்றும், இந்த மின்கலன்களை மிக விரைவாக,
ஆலைகளில் தயாரிக்க முடியும் என்றும் அய்.பி.எம் அறிவித்துள்ளது.
இன்றைய கணினிகள், விரைவில் சந் தைக்கு
வரவிருக்கும் குவாண்டம் கணினிகள், விரைவில் பரவ ஆரம்பித்துள்ள மின்
வாகனங்கள் போன்றவற்றுக்கு தங்களு டைய கடல் நீர் மின்கலன்கள் ஏற்றவையாக
இருக்கும் என அய்.பி.எம்மின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment