உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்
பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக் கூடத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்,
தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும்
நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பங்கேற்கிறார்கள்.. புதின
இலக்கியம், சிறுகதை இலக்கியம், நாவல் இலக்கியம் என்று மூன்று பிரிவுகளில்
ஏழு அமர்வுகளாக ஆய்வரங்கம் நிகழ்த்தப்பட உள்ளது. கருத்தரங்க ஆய்வுக்
கட்டுரைகள் நிகழ்வன்றே இரண்டு நூற்தொகுதிகளாக வெளியிடப்படுகின்றன.
கருத்தரங்கினை உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் ஒருங்கிணைப்புச்
செய்கிறார். நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தலைமை யேற்கிறார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துறைத்தலைவர் முனைவர் ஆறு.இராமநாதன்
அவர்கள் தொடக்கவுரையாற்றி, ஆய்வுக்கோவையை வெளியிடுகிறார். பிற்பகல்
நடைபெறவுள்ள நிறைவு விழாவில் கவிஞர் ஆண்டாள் பிரியதர்சிஷினி அவர்கள்
நிறைவுரை ஆற்றுகிறார்.
No comments:
Post a Comment