இதுகுறித்து அமெரிக்கா தரப்பில், ஈரான்
அதன் அதிகாரத்திற்காக ஏமனில் போர் நீடிக்க விரும்புகிறது. ஈரான் ஏமனில்
அதன் நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ள வேண்டும். ஏமன் மக்கள் நீண்ட நாட்களாக
துன்பத்தில் இருக்கிறார்கள். மேலும் ஏமன் மீது ஈரானுக்கு எந்த அக்கறையும்
இல்லை. என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஈரான் தரப் பில் எந்த பதிலும் இதுவரை அளிக்கப்பட வில்லை.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில்,
சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த
ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம்
முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு
ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான்
ஆதரவு அளிக்கிறது.
மேலும் அய்க்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண் டையிட்டு வந்தனர்.
ஏமனில் அய்ந்து ஆண்டு களாக நடைபெறும் போர்
காரணமாக ஆயிரக்கணக் கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக் கப்பட்டுள்ளனர். இந்நிலை
யில் சவுதி, ஏமன் போரை படிப்படியாக முடிவுக்கு கொண்டுவர முயற்சி எடுத்து
வருகிறது.
இதன் காரணமாக அங்கு தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
No comments:
Post a Comment