1) தனது மூதாதையர் உரு வாக்கிய பார்ப்பனிய
தத்துவத்தை ஒவ்வொரு பார்ப்பானும் நம்பு கிறான். இந்து சமுதாயத்திலே அவன்
ஒரு அந்நியனாக இருக் கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு
பக்கம் சூத்திரர் கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி
ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல் நாட்டினரைப்
போல்தான் தோன் றும். ஒரு ஜெர்மனியனுக்கு ஒரு பிரெஞ்சுக்காரன் எப்படி அந்நி
யனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அந்நியனோ, அது போலவே
பார்ப்பான் சூத் திரர்களுக்கும் தீண்டப்படாதவர் களுக்கும் அந்நியனாவான்:
(‘‘காந்தியும் காங்கிரகம் தீண்டப்படா தோருக்கு செய்தது என்ன?'' என்ற நூலில்,
பக்கம் 215)
2. ‘புரட்சி மனப்பான்மையுடை வன் போப் ஆக
மாட்டான். போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்பமாட்டான்.' இந்த அபிப்
ராயம் இந்தியப் பார்ப்பனர்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்றே
நம்புகிறேன். போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால்
பார்ப்பனராகப் பிறந்த வனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது
நிச்சயம்!
(‘சாதியை ஒழிக்க வழி' பக்கம் 83)
3) உடல் நலம் பற்றிய இலா பங்களை விட
சுயமரியாதையே மிகவும் முக்கியமானது. தாழ்த்தப் பட்டவர்களுடைய போராட்டம்
கவுரவத்திற்காக, சுயமரியாதைக் காகத்தான்.
Thus Spoke Ambedkar என்ற நூலிலிருந்து.
4) நான் உங்களைக் கேட்கி றேன். எலியும்,
பூனையும் ஒன்று சேர்ந்து வாழ முடியுமா? அது ஒன்றை ஒன்று அழித்துக் கொள்
ளும்; பாம்பும் கீரியும் ஒன்றாக வாழக்கூடுமா? பார்ப்பனர்கள் -
தீண்டப்படாதாருக்கும் உள்ள நிலைமையும் இது போன்றதுதான். ஒரு பார்ப்பனன் ஒரு
தீண்டப் படாதவனை முடிந்த வரையிலும், எவ்வளவு கீழான நிலையில் வைத்திருக்க
முடியுமோ, அதைச் செய்திட முயற்சிப்பான். தீண்டப் படாதவன் மனித உரிமையைக்
கூடப் பெற முடியாதபடி அவன் பார்த்துக் கொள்வான்.
5) இந்த நாடு சுதந்திரம் பெறு வதை நாங்கள்
எதிர்ப்பவர்களல்லர். ஆனாலும் சுயராஜ்யத்தில் தாழ்த் தப்பட்ட மக்களின் நிலை
என்ன வாயிருக்கும் என்று காந்தியாரிடமி ருந்து நான் தெரிந்து கொள்ள
வேண்டும். காந்தியோ மற்றவர் களோ என்னுடைய கேள்விக்குத் தகுதியான பதிலை
அளிக்க வில்லை.
6) தீண்டாமை என்பது ஜாதித் துவேஷத்தின் ஒரு வளர்ந்த நிலை. ஜாதியை ஒழிக்காமல் தீண்டா மையை ஒழிப்பது என்பது நடக்காத ஒன்று .
(Gandhi and Gandhism by Dr. B.R.Ambedkar)
7) இந்தியாவில் உள்ள பாட் டாளித் தோழர்கள்
ஏழை - பணக் காரன்; சுரண்டுவோர் - சுரண்டப் படுவோர் என்கிற அணுகுமுறை தவிர,
வேறு எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் இருக்கிறார்களா? ஜாதி, மத,
குலங்கோத்திர ஏற்றத்தாழ்வு களை மறந்து முதலாளித்துவத்திற்கு எதிராகப்
பாட்டாளி வர்க்கம் ஒற்று மைப்படுத்தும் நிலை இந்த நாட்டில் உள்ளதா?
பாட்டாளித் தோழர்கள் எல்லாம் ஜாதிச் சிறைக்குள் அடை பட்டுக் கிடந்தால்
முதலாளித்து வத்தை வீழ்த்துவது எப்படி? பாட் டாளிகளின் ஒற்றுமைக்கு மிகப்
பெரிய சவாலாய் இருப்பது ஜாதி முறைதான் என்பதை மறந்து விடாதீர்.
(Annihilation of Caste)
அம்பேத்கர்
இன்று அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள். (1956).
- மயிலாடன்
No comments:
Post a Comment