பெரியார் பிறந்த நாள் மலரில் மதுரா
பகுதியில் மரத்தடியில் நடக் கும் பள்ளி ஒன்று படமாக வந்திருந்தது, ஆனால்
இது பொய்யானது என்று சமூக வலைதளங்களில் கருத்துதெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் குளிர்கால கூட்டத் தொடரில்
பேசிய மதுரா நாடாளுமன்ற உறுப் பினர் எனது தொகுதியில் வயல் வெளியிலும்,
மரத்தடி யிலும் பள்ளிகள் நடக்கின்றன என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. அதில் அனைத்துக் கட்சி களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பேசி வரு கின்றனர்.
அதன்பகுதியாக, நடிகை யும், பாஜக
எம்பியுமான ஹேமாமாலினி பேசினார். மதுரா தொகுதியின் நாடாளு மன்ற உறுப்பின
ராக இருக் கும் அவர் கூறி இருப்பதாவது:
எனது தொகுதியில் பள் ளிக்கூடங்களின் நிலைமை ரொம்ப மோசம்.
நிறைய பள்ளிக்கூடங் களில் போதிய
கட்டடங்கள் இல்லை. பள்ளி வகுப்புகள் மரத்தடியில் நடத்தப்படுகின் றன.
கிராமப்புற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குப் போதிய கல்வி கிடைக்க வில்லை.
அரசு, தனியார் பங்களிப்பு இணைந்து,
இந்தப் பிரச்சி னைக்குத் தீர்வு காண வேண் டும். பள்ளிகளில் வகுப்பறை களை
கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.
No comments:
Post a Comment