(02-12-2019 நாளிட்ட 'டெக்கான் கிரானிகிள்' ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்)
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி
இரண்டாவது ஆட்சிக் கால இறுதியில், அரசியல் சூழ்நிலையில் ஓர் ஏற்ற
இறக்க நிலையைக் குறிப்பிடுவதாக தொழிலதிபர் அஜித் பிரேம்ஜி ஒரு கருத்தை
வெளியிட்டார். கொள் கைப்படி செயல்புரிய இயலாத நிலையில் அரசு இருப்ப தாக
அவர் குற்றம் சாட்டினார். இறுதியில் அதுவே தேர்தல் போர்க் களத்தின்
அறைகூவலாக மாறியது.
அரசை விமர்சிப்பது, கண்டிப்பது என்பது
இந்தியா வில் எப்போதுமே நிலவி வருவதுதான். ஒவ்வொரு கால கட்டத்திலும்
வெவ்வேறு முழக்கங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. ஆட்சி அதிகாரத்தில்
இருப்பவர்களைக் கண்டிப்பது, விமர்சிப்பது பற்றி எந்த வித அச்சமும்
எவருக்கும் எப்போதுமே இருந்ததில்லை. (நெருக்கடி நிலை காலத்தைத் தவிர்த்த
இதர நேரங்களில்). பேச்சு சுதந்திரத்தை மதிக்கும் நமது தாராளமயமான, மக்க
ளாட்சி அரசமைப்பு சட்டத்தில் இருந்து உருவாகி வந்ததுதான் தவறுகளைக்
கண்டுபிடித்து சுட்டிக்காட்டும் நமது நாட்டின் கலாச்சாரம் என்பதை மிகச்
சரியாகவே நாம் ஊகித்துக் கொள்ளலாம்.
என்றாலும், தற்போதைய மத்திய அரசின் கீழ்,
அரசை கண்டிக்கும் அல்லது விமர்சிக்கும் செயலுக்கு தக்கதோர் விலை கொடுக்க
வேண்டியிருக்கிறது என்ற கண்ணோட்டமே நிலவுகிறது. மத்திய புலனாய்வுத்
துறை, அமலாக்கப் பிரிவு இயக்குநரகம், வருமான வரித் துறை ஆகியவற்றை தனது
எதிர் கட்சியினர் மீது அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதில் அரசுக்கு
எந்தவித தயக்கமும் இருப்பதில்லை என்ற அச்சத் தினால், தொழில்துறை மற்றும்
வணிகத் துறையில் உள்ள மூத்த தலைவர்கள் எல்லாம் தாங்கள் எண்ணு வதை வெளியே
பேசாமல் மவுனமாக இருந்து வருவதே சிறந்தது என்று கருதி அவ்வாறே இருந்து
வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம் மற்றும்
டி.கே.சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளதும் கூட அவர்களுக்கு ஓர் நல்ல எச்சரிக்கையாக
அமைந்துள்ளது. தென் இந்தியாவில் இருந்த ஒரு முதுபெரும் தொழிலதிபர்
தற்கொலை செய்து கொண்டபோது, நாட்டில் நிலவி வரும் வரிவிதிப்பு, வசூல்
தீவிரவாதம் பற்றிய பேச்சு லேசாக எழுந்தது. என்றாலும் அதைப் பற்றி
விமர்சித்தவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே பேசினர்; அந்த பேச்சும்
விரைவில் அடங்கிப் போனது.
இத்தகையதொரு சூழ்நிலையில், கடந்த
சனிக்கிழமையன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட ஒரு
மும்பைக் கூட்டத்தில், ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. ஆட்சியினரிடம்
உண்மையை வெளிப்படையாகப் பேசுவதற்கு, இந்தியா வின் மிகப்பெரிய தொழில்
குழுமங்களின் ஒன்றான ராகுல் பஜாஜ் அவர்களுக்கு மிகுந்த துணிவு
இருந்திருக்க வேண்டும். தங்களுக்கு ஏற்படக் கூடிய பின் விளைவு களுக்காக
அச்சப்படும் தொழிலதிபர்கள் அரசை விமர்சித்துப் பேசுவதற்கு
அச்சப்படுகின்றனர் என்று அவர் பேசினார். பொருளாதாரம் மற்றும் வணிகத்துடன்
மட்டுமே அவர் தனது பேச்சை கட்டுப் படுத்திக் கொள்ளவில்லை. சகிப்புத்
தன்மை அற்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும், லிஞ்சிங் எனப்படும் மக்கள் கலவரக்
கும்ப லால் அடித்துக் கொல்லப்பட்ட கதைகளைப் பற்றியும் அவர் பேசினார்.
காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சேவை ஒரு தேசபக்தன் என்று போபால் பா.ஜ.க.
மக்களவை உறுப்பினர் அண்மையில் பேசியதைப் பற்றியும் அவர் தனது பேச்சில்
குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியவற்றுக் கெல்லாம் பதிலளித்த
அமித் ஷா, அச்சப்படுவதற்கு எந்த காரணமுமே இல்லை என்று அறிவித்ததுடன்,
அனைத்து விமர்சனங்களும் அவற்றின் தகுதியின் அடிப்படையில் மட்டுமே
பரிசீலிக்கப்படும் என்று கூறினார். இவை அனைத்துமே பொதுமக்கள் அனைவரும்
நன்கு அறியும் வண்ணம் நேர்ந்தவை என்பதால், திரு. பஜாஜ் அவர்கள் எதற்கும்
கவலைப்பட வேண்டியிருக்காது என்று கருதப் படுகிறது. என்றாலும், சூழ்நிலையை
மதிப்பிடும் முன்பாக அவர் காத்திருப்பதே நல்லது என்றும் கருதப்படுகிறது.
ஆனாலும், அரசின் நடவடிக்கைகள் பற்றிய அச்சத்தை அவர்
உடைத்தெறிந்துவிட்டார் என்று கூறுவதால் லாபமேதுமில்லை.
இவ்வாறு பேசுவதற்கு இந்த
தொழிலதிபர்களுக்கு எங்கிருந்து துணிவு வந்தது? ஒவ்வொரு வீட்டிலும்,
ஒவ்வொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இப்போது விவாதிக்கப்பட்டு வரும்
நாட்டின் சீரழிந்த பொருளாதார நிலைதான் அவர் இவ்வாறு பேசுவதற்கான
சுதந்திரத்தை அளித்ததா? அல்லது, மோடி-ஷா இணையரின் 'மந்திர', தந்திர
ஆற்றல்களுக்கு இடையேயும், அண்மை யில் நடந்து முடிந்த மகாராட்ரா மற்றும்
அரியானா சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்பார்த்ததை விட மிக மோசமான அளவில்
பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என்பதே இதன் காரணமா? அவ்வாறு இருக்கவும்
வாய்ப்பு உள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை பற்றி பஜாஜூக்கு
முன்னதாக அரசின் கொள்கைகளை விமர்சித்தவர்களும் உள்ளனர். அரசின் முதன்மை
பொருளாதார ஆலோசர் அரவிந்த் சுப்பிரமணியமும், நிதி ஆயோகின் முன்னாள்
துணைத் தலைவர் அரவிந்த் பாணகரியா போன்ற புகழ் பெற்ற பொருளாதார
வல்லுநர்களும் தங்கள் பதவிகளை விட்டு விலகி அமெரிக்காவுக்கே திரும்பிச்
சென்று விட்டனர். அவர்களில் முன்னவர் அரசின் பணமதிப் பிழப்பு நடவடிக்கை
பற்றியும், சரக்கு மற்றும் சேவை வரி திட்டம் தவறாக
நடைமுறைப்படுத்தப்பட்டது பற்றியும் விமர்சித்து பேசினார். ஆனால் பஜாஜின்
பேச்சு அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அகண்ட தொரு கருத்தாக இருந்தது.
பா.ஜ.க. அரசின் கொள் கைகள் காரணமாக நாடு அடைந்துள்ள மிக மோசமான
பொருளாதாரப் பின்னடைவு பற்றியும், பெரும்பான்மை மதமான இந்து மத மக்கள்
ஆதரவு அளித்து வரும் பா.ஜ.க. அரசின் கொள்கை பற்றியும் அனைத்துலக அளவிலான
ஊடகங்களும் இப்போது பேசிக் கொண்டி ருக்கின்றன.
நன்றி: 'தி டெக்கான் கிரானிகிள்' 02-12-2019
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.
No comments:
Post a Comment