Wednesday, December 18, 2019

இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்தை புதுச்சேரியில் அனுமதிக்கமாட்டோம் முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்


‘‘இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தை புதுச்சேரியில் ஒருபோதும் ஏற்க மாட்டோம், இதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை’’ என தி.மு.க. ஆர்ப் பாட்டத்தில் புதுச்சேரி முதல் வர் நாராயணசாமி பேசினார்.
ஈழத்தமிழர், சிறுபான்மையினருக்கு எதிராக இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத் தம் கொண்டு வந்த மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்தும், அதற்கு ஆதரவு அளித்த அதிமுக அரசை கண்டித்தும் புதுச்சேரி வடக்கு மாநில தி.மு.க. சார்பில் தலை மை அஞ்சல் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந் தது. வடக்கு மாநில அமைப் பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை தாங்கினார்.
இதில் முதல்வர் நாராயண சாமி கலந்து கொண்டு பேசிய தாவது: இந்திய அரசியல மைப்பு சட்டத்தின்படி மதம், இனம், மொழி வாரியாக மக் களை பிரிக்க கூடாது. ஆனால் இந்த சட்டத்தில் இஸ்லா மியர்கள் பிரிக்கப்பட்டுள் ளனர். இதனால் ஒரு கோடி இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்திருத்தம் கொண்டு வந்ததால் நாடே பற்றி எரி கிறது. அசாம், மிசோரம், மணிப்பூர், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் போ ராட்டம் தீவிரம் அடைந்துள் ளது. தமிழகம், புதுச்சேரியிலும் போராட்டம் நடந்து வரு கிறது.
மேற்கு வங்காளத்தில் இந்த சட்ட திருத்தத்தை என் உயிரே போனாலும் அமல்படுத்த மாட்டோம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். புதுச் சேரியிலும் இந்த சட்டதிருத் தத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இத னால் ஆட்சியே போனாலும் கவலை இல்லை.
புதுச்சேரியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் மரியாதை யுடன் நடந்து கொள்கிறார்கள். எனவே இந்த சட்டத் திருத் தத்தை அனுமதிக்க மாட் டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...