இந்த படுகொலை தொடர்பாக நீதிவிசாரணை வேண்டி
பல்வேறு மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தை
அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடைபெற்றது. இதில்
கொல்லப்பட்ட அனைவருமே அப் பாவிப் பொதுமக்கள் என்ற உண்மை வெளி வந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜப்பூர்
மாவட்டத்தில் உள்ள சர்கோடா என்ற பழங்குடியினர் கிராமத்தில் மாலை ஊர்
பொதுக்கூட்டம் ஒன்று நடந்துகொண்டு இருந்தது, அப் போது அங்கு வந்த
சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் நக்சல் ஒழிப்புப் படை இரண்டும் சேர்ந்து ஊர்
கூட் டத்தில் கலந்துகொண்ட பொதுமக் களை நோக்கி எவ்வித முன்னறிவிப்பும்
இல்லாமல் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டது; ஊர்ப் பிரச்சனை தொடர்பாக
கூடிய மக்கள் மீது நடந்த தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். 22 பேர்
படுகாய மடைந்தனர். இது அப்பட்டமான கொலை என்றும் அப்பாவி மக் களைக் கொலை
செய்த பாதுகாப்பு படையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறி
மனித உரிமை அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து ஓய்வு பெற்ற
நீதிபதி தலைமையில் நீதிவிசாரணை நடைபெற்றது. 5 ஆண்டு களாக நடைபெற்ற விசாரணை
அறிக்கை ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இந்த விசார்ணை அறிக்கை
பாதுகாப்புப் படையினரை கடுமை யாக கண்டித்துள்ளது.
மேலும் கொல்லப்பட்ட 17 பேர் மாவோயிஸ்டுகள்
என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை என்றும், கொலைகளுக்குப் பின்னர் காவல்
துறை வேண்டுமென்றே மரண மடைந்தவர்களை நக்சலைட்டுகள் என்று காட்ட பலரை
கடுமையாக மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளனர் என் றும் நீதிவிசாரணையில்
சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து சிஆர்பிஎஃப் மற்றும்
சத்தீஸ்கர் காவல்துறையின் கூட்டுக் குழு கூறும் போது 28.6.2012 அன்று
பிஜாப்பூரில் உள்ள சார் கோடாவில் 17 பேரை சுட்டுக் கொன்றது. சார்கோடாவில்
மாவோயிஸ்டுகள் கூடி இருப்பதாக எங்க ளுக்கு உறுதியான தகவல் கிடைத்தது அதனை
அடுத்து நாங்கள் நடவடிக் கையைத் தொடங்கியதாக பாது காப்புப் படையினர்
கூறினர்.
ஆனால் ஊர்க்காரர்கள் கூறும் போது
ஊர்க்கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது எங் களைச் சுற்றிவளைத்த
பாதுகாப்புப் படையினர் திடீரென்று சுட ஆரம் பித்துவிட்டனர். இந்த
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் மாவோயிஸ்டுகள் இல்லை; அனை வருமே
கிராமக் கூட்டத்தில் கூடியிருந்த அப்பாவி கிராமவாசிகள் என்று கூறினர்;
கொல்லப்பட்டவர் களில் ஆறு சிறுவர்கள் இருந்ததாக மனித உரிமை ஆர்வலர்கள்
கூறினர்.
மனித உரிமைக் குழுக்கள் மற்றும் காங்கிரஸ்
உள்ளிட்ட எதிர்க்கட்சி களின் கடும் அழுத்தத்தின் காரண மாக பாஜக அரசு நீதி
விசாரணைக்கு உத்தரவிட வேண்டியிருந்தது. இதனை அடுத்து மத்திய பிரதேச
உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வி.கே. அகர்வால் தலைமையிலான ஒரு
உறுப்பினர் நீதி ஆணையம் கடந்த மாதம் தனது அறிக்கையை மாநில அரசிடம்
வழங்கியது.
அந்த விசாரணை அறிக்கை ஊடகங்களில் வெளியாகி
யுள்ளது. கொல்லப்பட்டவர்கள் கிளர்ச் சியாளர்கள் அல்லர் என்றும் அவ்
வறிக்கை திட்டவட்டமாக தெரி விக்கிறது.
No comments:
Post a Comment