ஆர்.எஸ்.எஸ். கொடியை அகற்றிய
காரணத்திற்காக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத் தின் மூத்த அதிகாரியை கட்டா யமாக
பதவி விலக வைத்ததோடு, அவர் மீது உத்தரப்பிரதேச காவல்துறையினர் மத உணர்வு
களை அவமதித்ததாக வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
மிர்சாபூரில் உள்ள புகழ் பெற்ற
பல்கலைக்கழகமான பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் துணை தலைமைத் தலைவராக
இருந்து வருபவர் கிரண் தாம்லே. இவர், மாண வர்கள் மத்தியில் மைதானத்தில்
இருந்த ஆர்எஸ்எஸ் கொடியை அகற்றியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து,
தாம்லேவை பதவி நீக்கம் செய்யக்கோரி மாண வர்களில் ஒரு பிரிவினர் வளா கத்தில்
போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இத்துடன் தாம்லேக்கு அளிக் கப்பட்ட
தொந்தரவுகள் முடிந்து விடவில்லை. உள்ளூர் ஆர் எஸ்எஸ் பிரமுகர்கள் அளித்த
புகாரின் பேரில் காவல்துறையினர் தாம்லேமீது வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.
இதில் கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்
அதிகாரி கூறும் போது, தங்கள் பல்கலைக்கழக விதிமுறையையே தான் பின்பற் றியதாக
தெரிவித்துள்ளார். முத லில் சாக்சா மாணவர்களையே அந்த கொடியை
அப்புறப்படுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளார். ஆனால், கொடியை அப்புறப் படுத்த
யாரும் முன்வராததால், தானே கொடியை அகற்றியுள் ளார். இதுபோன்ற பதற்றமான
சூழலில் இப்படி கொடிகளை பறக்க விடக்கூடாது என்று மாண வர்களுக்கு
அறிவுறுத்தியும் உள்ளார்.
எனினும், மாணவர்களில் ஒரு பிரிவினர்
வற்புறுத்தி கொடியை வைக்க அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், வளாத்திற்குள்
கொடியை வைக்க நிச்சயமாக அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தேன்
என்றார்.
No comments:
Post a Comment