மும்பை உள்ளிட்ட நகரங்களில், வீடு
வாங்கும் தன்மை மேலும் கடினமாகியுள்ளது.இந்தியாவில் வீட்டிற்கான
சராசரி விலை, சராசரி இந்தியரின் மாத வருமானத்தில், 61.5 மடங்காக
இருப்பதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள, குடியிருப்பு வீடு விலை
தொடர்பான அறிக்கை தெரிவிக்கிறது.
மும்பை நகரத்தில் வீட்டிற்கான சராசரி
விலை, சராசரி மாத வருமானத்தை விட, 74.4 மடங்காக இருக்கிறது. சென்னை
நகரில் இது, 58.6 மடங்காக இருக்கிறது. பல நகரங்களில் வீடு வாங்குவது
கடினமானதாக மாறியிருக்கிறது.வீட்டுக்கடனுக்காக இந்தியர்கள்
செலுத்தும் மாதத்தவணையும் அதிகரித்துள்ளது. எனினும், இது, கடன்
வலையாக மாறும் நிலை இல்லை.
வீட்டு மதிப்புக்கும் கடனுக்குமான
விகிதமும் அதிகரித்துள்ளது.மேலும் இந்தியர்களின் வீட்டுக்கடன்
சுமை கடந்த, 4 ஆண்டுகளில், 13 சதவீதம் உயர்ந்துள்ளது. வீடு
வாங்குபவர்கள் சராசரியாக தங்கள் ஆண்டு வருமானத்தை விட, 3.4
மடங்கு கடன் பெற வேண்டியுள்ளது. சண்டிகர், அய்தராபாத் மற்றும்
அகமதாபாத் நகரில் இது, மிகவும் அதிகமாக உள்ளது.
No comments:
Post a Comment