Thursday, August 1, 2019

புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டும் இந்துத்துவா கருத்துகளை புகுத்த முயற்சி : திரைக்கலைஞர் ரோகிணி பேட்டி

புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங் களும் எதிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள், கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவரும், திரைக் கலை ஞருமான  ரோகிணி கூறி னார்.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முன் இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதன் கிழமை நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
புதிய கல்விக் கொள்கை நமக்குத் தேவை இல்லாதது. அதை நாம் எதிர்க்க வேண்டும். அதில் உள்ள குழப்பங்களைத் தெளிவு படுத்திய பிறகுதான், அந்த வரைவை நிறைவேற்ற வேண்டும். அது தொடர் பான கருத்துகேட்பு கூட்டம் கண்துடைப் பாகத்தான் நடத்தப்படு கிறது. இது ஏழை மக்களுக்கு எதிரானது. மாநில உரிமைகளுக்கு எதிரானதாகவும் உள்ளது.  ஏழைக் குழந்தை களுக்கு தரமான, சமமான கல்வியைக் கொடுக்காமல் அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றால்தான் பட்டப் படிப்புக் கைகூடும் எனக் கூறுவதை ஏற்க முடியாது. இதை எல்லாம் மாணவிகளிடம் விளக்கி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைக்க வந்துள்ளேன்.
இதை அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டும். தமிழக அரசும் வலுவாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து திரைக் கலைஞர் சூர்யா தெரிவித்த கருத்தை நான் ஆதரிக் கிறேன். அவருக்கு எதிராகப் பேசு பவர்கள் அதைப்பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதை விவாதப் பொருளாக்க வேண்டும்.
நுழைவுத் தேர்வு, மும்மொழிக் கொள்கை, 3-ஆம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு என எல்லாமே குழந்தைகளுக்கு அழுத்தம் தருவதாக உள்ளது. அவர் களை உற்சாகப் படுத்தும் விதமாக எதுவும் இல்லை.  மத்திய அரசு எல்லாவற்றையும் ஒரே விதமாகக் கையாளப் பார்க்கிறது.
சம்ஸ்கிருதம், இந்தி கற்றுக் கொடுக்க முயற்சிக்கிறது.
இந்துத்துவா கருத்துகளை மாணவர்களிடம் பின்வாசல் வழி யாகப் புகுத்த பார்க்கின்றனர் என் றார் ரோகிணி.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...