Wednesday, August 7, 2019

சோதனைகளை சாதனைகளாக்க மானமிகு கலைஞர் நினைவு நாளில் சூளுரைப்போம்!




தந்தை பெரியார் என்ற அறிவு ஆசானின் ஈரோட்டுக் குருகுல மாணவராகப் பயின்று, அண்ணாவின் பாசத்திற்குரிய தம்பியாக இருந்து, அவ்விரு பெரும் தலைவர்களால் அடுத்து தமிழ்நாட்டை, திராவிடரின் அரசியல் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்திடும் ஆற்றலாளர் என்பதை நிரூபித்த உழைப்பின் உருவமாக உயர்ந்த தொண்டர் நாதன் அருமை முத்தமிழ்அறிஞர் கலைஞர் அவர்கள்.

அவர் நம்மைவிட்டு பிரிந்து - உடலால் பிரிந்து - உணர்வாகவே என்றும் நிறைந்தவராகி ஓராண்டு காலம் உருண்டோடிவிட்ட நாள் இன்று (7.8.2019).

ஆம் - அவரது முதலாம் ஆண்டு நினைவு கள், அது வரலாற்றுக் குறிப்பு; மற்றபடி அவரது நினைவு இன்றும் என்றும் இன எதிரிகளைக் கூட கலக்கமுறத்தான் செய்கிறது.

அய்ம்பெரும் முழக்கம்



அய்ம்பெரும் முழக்கத்தை அரசியல் ஆட்சி யின் கோட்பாடுகளாக்கித் தந்து, அதற்காகவே துணிந்து இருமுறை ஆட்சிகளை இழந்தும், அந்த லட்சியப் பயணத்தினை வெற்றிகரமாக நடத்தி வீர வரலாறு படைத்த மகத்தான தலைவர் - தி.மு..வின் ஒப்பற்ற தலைவர் - அறிஞர் அண் ணாவுக்குப் பிறகு 'மானமிகு சுயமரியாதைக் காரரான' நமது கலைஞர் அவர்களே!

அவர் தம் உழைப்பையும், இராஜதந்திர அணுகுமுறையையும், அரசியல் வியூகங் களையும் நன்கு பல ஆண்டுகள் கற்றுத் தெளிந்த -துணிந்த நமது தளபதி மானமிகு - மாண்புமிகு மு..ஸ்டாலின் அவர்கள் கழகத்தை வெற்றி வாகை சூட வைத்து, வெற்றிடம் இல்லை - விளை நிலம் அங்கே வெற்றியின் விளைச் சலுக்குப் பஞ்சமில்லை என்று காட்டி வருவ தோடு, இந்தியத் துணைக் கண்டத்தில் தி.மு..தான் இன்று ஜனநாயகத்தின் காவல் அரண் என்று நாடாளுமன்றத்தில்  நிரூபிக்கும் வண்ணம் சிறந்த பார்லிமெண்ட்டேரின்யன் களை அனுப்பி, இந்தியாவில் ஜனநாயக மாண் பினை நாளும் காப்பாற்றிட முழக்கமிடுகிறார்.

தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க,  கலைஞர் வாழ்க, திராவிடம் வெல்க என்ற முழக்கங்கள் சோதனைமிக்க இந்த காலகட்டத்தில் தேவைப்படும் தருணம் - யானை பெரிதாயினும் அங்குசம் நாங்கள் என்று ஆளும் கட்சிக்குக் காட்டி அகிலத்தை  அதிச

யக்க வைக்கும் அரசியல் நடத்தப்படுகிறது.

சூளுரைப்போம்!

நம் கலைஞர் மறையவில்லை. வாழுகிறார் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பதற்கான எடுத்துக்காட்டு இதைவிட வேறு என்ன வேண்டும்?

சோதனைகளும் அறை கூவல்களும் திராவிடர் இயக்கத்திற்குப் புதிதல்ல.

சாதனைகளாக மாற்றிட கலைஞரின் நினை விடம் முன் நாம் சூளுரைத்து, இன, அரசியல் எதிரிகளுக்கு சுயமரியாதை சூடு போடுவோம். வாகை சூடுவோம்.

வாழ்க பெரியார்!

வாழ்க கலைஞர்!!

வாழ்க திராவிடம்!!!



கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

7.8.2019

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...