வங்கி மோசடி தொடர்பாக 'டெக்கான் கிரானிக்கல்' நாளிதழ் உரிமையாளர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வங்கி கடன் மோசடி தொடர்பாக பிரபல ஆங் கில
நாளிதழான டெக்கான் கிரானிக்கல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை ஆய்வு
நடத்தியது. அப் போது ரூ.5 லட்சம் மதிப்பி லான பழைய ரூபாய் நோட்டுக்களும்
பறிமுதல் செய்யப்பட்டன.
வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாத நிலை
யில், கடன் மோசடி தொடர் பான வழக்கில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளி
தழின் உரிமையாளர் வெங்கட்ராம ரெட்டி மற்றும் விநாயகரெட்டி ஆகியோரது,
அய்தராபாத் மற்றும் டில்லியில் உள்ள வீடுகள், அலுவலகங்களில்
அமலாக்கத்துறை அதி காரிகள் அதிரடியான சோத னைகளை மேற் கொண்டனர்.
இந்த சோதனையின் போது, 'டெக்கான் கிரா
னிக்கல்' உரிமையாளர் வீட்டில் இருந்து, அசையா சொத்துகள், டிஜிட்டல்
ஆதாரங்கள், ரூ.5 லட்சம் ரூபாய்க்கான பழைய ரூபாய் நோட்டு கட்டுகள், இரண்டு
சொகுசு கார்கள் உள்ளிட்ட முக்கிய ஆவ ணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடன் பெற்ற தொகை யாருக்கு திருப்பி விடப்
பட்டது என்று டிஜிட்டல் ஆதாரங்களைக் கொண்டு அமலாக்கத்துறை அதிக ரிகள் ஆய்வு
செய்து வரு வதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஊடகத் துறையினரிடையே பர
பரப்பை ஏற்படுத்தி உள் ளது.
'டெக்கான் கிரானிக்கல்', 'த டெலிகிராப்'
போன்ற ஆங்கில நாளிதழ்கள் மோடியின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து எழுதி
வருகின்றன. இத னால் பழைய வழக்குகளை தூசி தட்டி இவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment