Thursday, August 1, 2019

தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு

எதிர்க்கட்சிகளின் ஆக்கப் பூர்வமான கடும் எதிர்ப்புகளைப் புறந்தள்ளி தேசிய மருத்துவக் கவுன்சில்  மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இதனைக் கண்டித்து இந்திய மருத்துவர் சங்கம் வேலை நிறுத்தத்தில் குதிக்கிறது.

கடும் எதிர்ப்பு
இந்த மசோதா படி, எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்கள், இறுதியாண் டில் நடத்தப்படும், 'நெக்ஸ்ட்' எனப் படும், தேர்வில் பெறும் மதிப்பெண் களின் அடிப்படையில், முதுகலை படிப்பில் சேர்க்கப்படுவர். இதுபோல, பல முக்கிய அம்சங்களை இந்த மசோதா கொண்டுள்ளது. இதன் மீதான விவாதம், மக்களவையில் நேற்று நடந்தது. மசோதாவுக்கு ஆதர வாக, பா.ஜ., - எம்.பி., மகேஷ் சர்மா உள்ளிட்டோர் பேசினர். ஆனால், தி.மு.க.,வின், டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா, திரிணமுல் காங்கிரசின், ககோலி கோஷ் தஸ்திகர் போன்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'ஏழை களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மருத்துவ துறையில், மத்திய அரசின் தலையீடு அதிகரித்து விடும்' என்றனர்.
தி.மு.க., - எம்.பி., ராசா, பேசியதாவது: முன்பிருந்த மருத்துவ கவுன்சிலில், அரசு தரப்பில், அய்ந்து பேர் நியமிக் கப்பட்டாலும், மற்ற உறுப்பினர்கள் எல்லாம் தேர்தல் மூலம், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பிரதிநிதிகளாக, இடம் பெற்றனர். ஜனநாயக ரீதியில் இயங்கிய அந்த அமைப்பை மூடிவிட்டு, தற்போது, மூன்றடுக்கு கொண்ட நியமன அமைப்பை, அரசு கொண்டு வருகிறது. இதில், 25 பேர் இடம் பெறும், மருத்துவ ஆணையம்; 89 பேர் இடம் பெறும், மருத்துவ ஆலோ சனைக்குழு ஆகிய இரண்டு அடுக்குகள் அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே ஆணையத்தில் உள்ள, 25 பேரும், அதன் கீழ் இயங்கும் ஆலோசனை குழுவிலும் இடம் பெற உள்ளனர். அப்படியெனில், இவர்கள், தங்களுக்கு தாங்களே ஆலோசனை அளித்துக் கொள்வரா? மூன்றாவதாக, 'தர நிர்ணயக்குழு' என்ற, அய்ந்து பேர் குழு, புதிய கல்லுரிகளின், உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து, அனுமதி வழங்கும். இந்தக் குழுவின் தலைவர், பிரதான அமைப்பான, ஆணையத் திலும் உறுப்பினராக இருப்பார். அப்படியெனில், தலைவராக இவர் தந்த அனுமதியில், ஏதாவது தவறு என்றால், அப்பீலுக்காக, இவரை உறுப் பினராக கொண்ட ஆணையத்திடமே வர வேண்டுமா. முடிவெடுத்தவரே, மேல்முறையீட்டை திரும்ப விசாரிப் பாரா. எனவே, அரசால் நியமனம் செய்யப்படும், அந்த, 25 பேர் வைத்தது தான், சட்டமாக இருக்கப்போகிறது. மேலும், 50 சதவீத இடங்களுக்கான கட்டணம் மட்டுமே குழுவால் நிர்ண யிக்கப்படுவதும், மீதமுள்ள, 50 சதவீத இடங்களுக்கு, சம்பந்தப்பட கல்லூ ரியே, கட்டணம் நிர்ணயிக்க அனுமதிப் பதும், முறைகேடுகளுக்கு வழிவகுக் காதா?
ஆணையத்தில், ஆறு துணைவேந்தர் களுக்கு இடம் வழங்கப்படுகிறது. அதுவும், 29 மாநிலங்களுக்கும், சுழற்சி முறையில் தான் இந்த இடம் வழங்கப் படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்படியெனில், தமிழக துணைவேந்தர் ஒரு முறை வந்துவிட்டால், மீண்டும் இடம்பிடிக்க, 14 ஆண்டுகளாகும்.அடுத்து, டாக்டரும் அல்லாமல் நர்சும் அல்லாமல், 'மெடிக்கல் டிரைனிங்' என்ற பெயரில், பயிற்சிதந்து, கிராமங் களில் பணியமர்த்த இம்மசோதா வழி செய்கிறது. அவர்கள் யார், என்ன பயிற்சி, என்ன நடைமுறை என்ற எதுவுமே விளக்கப்படவில்லை.

ஜனநாயகத்துக்கும் சமுகநீதிக்கும் எதிரானது
ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரான, இந்த சட்டத்தின் மூலம், மருத்துவக் கல்வியின் எதிர்காலத்தை, குழிதோண்டி புதைத்த கட்சி, பா.ஜ., என்ற களங்கம், வரலாற்றில் இடம் பெறப் போகிறது. மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், நல்ல டாக்டர். இம்மசோதா மூலம், நல்ல ஆப்பரேஷன் செய்துள்ளார்; ஆனால், பாவம், பேஷன்ட் இறந்து விட்டார்.இவ்வாறு, ராசா, பேசினார்.
விவாதத்துக்கு பதிலளித்து பேசிய, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டுகளை நிராகரித்தார். ''இந்த புதிய சட்டம் மூலம், மருத்துவக் கல்வித் துறையில் நீடித்து வந்த, 'இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம்' முடிவுக்கு வரும்,'' என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்த மசோதா, ஏழைகளுக்கானது. வரலாறு மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. லஞ்சம், ஊழலில் ஊறித் திளைத்த இந்திய மருத்துவக் கவுன்சிலின் அதி காரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனிமேல், நாட்டின் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவத் துறை சீரடையும்.இவ்வாறு, அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, மக்களவையில் இம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தேசிய மருத்துவ கமிஷன் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் நேற்று, 5,000த்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள்,  பேரணியாக சென்றனர். மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தினர். அவர்களை கைது செய்த காவல்துறையினர் பின் விடுதலை செய்தனர்.

இந்திய மருத்துவர் சங்கம் வேலை நிறுத்தம்
இந்நிலையில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய மருத்துவ சங்கம் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ராஜன் ஷர்மா, இந்த மசோதா மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் இம்மசோதா பணக் காரர்களுக்கு சாதகமாக அமைந் துள்ளது. அத்துடன் இது ஊழலுக்கு வழிவகுக்கும் விதத்தில் அமைந்துள் ளது. ஆகவே இதனை எதிர்த்து நாளை நாங்கள் நாடு தழுவிய போராட்டத் திற்கு அழைப்பு விடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...