Sunday, August 4, 2019

கூடுதல் சலுகைகள் வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையா ளர்களுக்கு அபினந்தன் 151 சலுகை ரூ. 151 விலையில் அறிவிக்கப்பட்டது. பிரீ பெயிட் பயனர்களுக்கு அறி விக்கப்பட்ட இந்த சலுகைக் கான பலன்களை அந்நிறுவ னம் மாற்றியமைத்துள்ளது. அந்த வகையில் அபினந்தன் சலுகையில் 500 எம்.பி. டேட்டா தினமும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
இனி அபினந்தன் 151 சலுகையில் பயனர்க ளுக்கு மொத்தம் 1.5 ஜி.பி. டேட்டா தினமும் வழங்கப்படும். இதன் வேலிடிட்டி 24 நாட் கள் ஆகும். முன்னதாக இச் சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது. தற்சமயம் இதில் 50 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்கப் படுகிறது.
500 எம்.பி. டேட்டா தவிர அபினந்தன் 151 சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 149 பிரீபெயிட் சலுகைக்கு போட்டியாக அமை கிறது. ஜியோ ரூ. 149 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படு கிறது. இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். முன்ன தாக பி.எஸ்.என்.எல். தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் மாற்றம் செய்யப் பட்டு கூடு தல் டேட்டா வழங்கப்பட்டது.
பி.எஸ்.என்.எல். அபினந் தன் 151 பிரீபெயிட் சலுகை ஜூன் மாதத்தின் இரண்டா வது வாரத்தில் அறிவிக்கப்பட் டது. ரூ. 151 விலையில் அறி விக்கப்பட்ட இச்சலுகையில் 1 ஜி.பி. டேட்டா வழங்கப் பட்டது. இதில் அன்லிமிட் டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட் டவை 24 நாட்களுக்கு வழங் கப்படுகிறது.
புதிய மாற்றத்தின் பிறகும் இச்சலுகையில் அன்லிமிட் டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். பலன்களில் எவ்வித மாற்றமும் செய்யப் படவில்லை. ஏற்கனவே இச்சலு கையை தேர்வு செய்து பயன்படுத்துவோருக்கும் கூடுதல் பலன்கள் வழங்கப்படுவதாக கூறப் படுகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...