புதுடில்லி,ஆக.24, முன்னாள் பிரதமர்
மன்மோகன் சிங், மாநிலங்களவை
உறுப்பினராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
காங்கிரஸ்
மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன் மோகன் சிங்,
அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை
உறுப்பி னராக இருந்து வந்தார்.
இவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 14ஆம்
தேதி முடிந்தது.
இந்நிலையில்,
ராஜஸ்தானில் நடந்த மாநிலங் களவை
உறுப்பினர் இடைத்தேர்தலில் மன்மோகன் சிங் போட்டியிட்டார். அவருக்கு
எதிராக பாஜக வேட்பாளரை நிறுத்த
வில்லை. இதனால், மன்மோகன் போட்டியின்றி
தேர்வு செய்யப் பட்டார்.
இதைத் தொடர்ந்து, மாநிலங் களவை உறுப்பின
ராக மன்மோகன் சிங் நேற்று பதவியேற்றுக்
கொண் டார். அவருக்கு மாநிலங்களவை
தலைவர் வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது,
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி,
முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,
மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத்,
அகமத் படேல் மற்றும் ஆனந்த்
சர்மா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும்
சில பாஜக தலைவர்களும் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment