Wednesday, August 7, 2019

இலங்கை சிறையில் உள்ள 7 மீனவர்களை விடுவிக்கக் கோரி இராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு



இராமநாதபுரம்,ஆக.7, படகு பழுதானதால் கச்சத் தீவில் எல்லை தாண்டிய இராமேசுவரம் மீனவர்கள் 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கக் கோரி அவர்களின் குடும்பத்தினர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இலங்கை கடற்படை சிறை பிடித்துச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்யக் கோரி அவர்களது குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை அளித்துச் சென்றனர்.

இராமேசுவரத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரது விசைப்படகில் மீனவர்கள் 7 பேர், கடந்த ஜூலை 27-இல் இராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஜூலை 28-இல் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகு பழுதானது.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அந்த படகை சிறைபிடித்து, இராமேசு வரத்தைச் சேர்ந்த ஜோசப் பால்ராஜ்(37), பெனிட்டோ (40), நாகராஜ் (45), இன்னாசி (22), சுப்ரமணி(35), முனியசாமி (48), சத்தியசீலன்( 25) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 7 மீனவர்களும் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப் பட்டனர்.

படகு பழுதான மீனவர்களை மனிதாபினமான அடிப் படையில் திருப்பி அனுப்பி வைக்காமல், கைது செய்து சிறையில் அடைத்ததுள்ளனர். அதனால் அவர்களை விடு விக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் வழக்குரைஞர் திருமுருகன் தலை மையில், ஏழு மீனவர்களின் குடும்பத்தினர் குழந்தைகளுடன் வந்து, நேற்று  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கண்ணபிரானிடம் மனு அளித்தனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...