குடியரசான பிறகு இந்தியாவின் முதல் மக்கள்
தொகை கணக்கெடுப்பு 1951-இல் நடைபெற்றபோது, ஜாதிவாரி கணக்கெடுப்பு
கைவிடப்பட்டது. ஆனால் அரசியல் சட்டத்தின் 341, 342 -ஆவது பிரிவுகளின்படி
பட்டியல் இன ஜாதி, பழங்குடியினர் கணக்கெடுப்பு மட்டும் தொடர்கிறது.
2021- ஆம் ஆண்டு16-ஆவது மக்கள் தொகை
கணக்கெடுப்பு நடைபெறு கிறது. பல்வேறு ஜாதி பெயர்களை அட்டவணைப்படுத்துவது
கடினமாக உள்ளதால் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரியான" தரவுகளை
சேகரிக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் 40 லட்சத்திற்க்கும் மேற்பட்ட
ஜாதிப்பிரிவுகள் உள்ள தாகவும், அவற்றை அட்டவணைப் படுத்துவது கடினமாக
உள்ளதால் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரியான" தரவுகளை சேகரிக்க
வாய்ப்பில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி தெரிவித்தார்.
31 லட்சம் பயிற்சி பெற்ற கணக்
கீட்டாளர்கள் ஆண்ட்ராய்டு அடிப் படையிலான மொபைல் போன்களைப் பயன்படுத்தி
டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட்ட தரவுகளைசேகரிக்கும் இந்த பணியில் ஈடுபட
இருப்பதாகவும், 2024- - 2025 ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகை கணக்கெடுப்புத்
தரவு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:
"ஜாதித் தரவு கடைசியாக சேக
ரிக்கப்பட்டபோது கணக்கிட கடின மாக இருந்தது, எங்களுக்கு 40 லட்சம்
ஜாதிகளின் பெயர்கள் கிடைத்தன" என்று அந்த அதிகாரி கூறினார். “உதாரணமாக,
யாதவ் ஜாதியைச் சேர்ந்த ஒருவர் யது, யதுவன்ஷி போன்ற வடிவங்களில் குறிப்பிடு
கின்றனர்; தரப்படுத்தல் இல்லை. மக்கள் சில சமயங்களில் கோத்திரத் துடன்
ஜாதியைக் குழப்புகிறார்கள்," என்று குறிப்பிட்டார் கடந்த முறை, மக்கள் தொகை
கணக்கெடுப்பு காகிதத் தில் பதிவு செய்யப்பட்டது, பின்னர் தகவல்கள் ஸ்கேன்
செய்யப்பட்டு பின்னர் தரவுத்தளத்தில் வழங்கப் பட்டன, இந்த முறை முழு
செயல்முறையும் டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment