சந்திரனை பற்றி ஆய்வு செய்வதற்காக இந்திய
விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 என்ற விண்கலத்தை
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில்
உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 22-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில்
ஏவியது. தற்போது சந்திரயான்-2 விண்கலம் பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி
வருகிறது.
விண்கலத்தின் செயல்பாட்டை பெங்களூ ருவில்
உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறை யில் இருந்தபடி விஞ்ஞானிகள் கண்காணித்து
வருவதுடன், அதன் சுற்றுவட்ட பாதையின் உயரத்தையும் அவ்வப்போது உயர்த்தி
வருகி றார்கள். சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையின் உயரம்
நேற்றுமுன்தினம் 4ஆ-வது தடவையாக உயர்த்தப்பட்டது.
பூமிக்கு அருகே குறைந்த பட்சமாக 277
கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 89 ஆயிரத்து 472 கி.மீ. தொலைவிலும் சுற்றி
வரும் சந்திரயான்-2 விண் கலத்தில் உள்ள எல்-14 என்ற நவீன கேமரா முதன்
முதலாக பூமியை புகைப்படம் எடுத்து தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அனுப்பி
இருக்கிறது.
அதாவது வெள்ளிக்கிழமை மாலை 5.28 மணி முதல்
5.37 மணி வரை எடுக்கப்பட்ட 5 புகைப் படங்களை விண்கலம் அனுப்பி உள்ளது.
சந்திர யான்-2 பூமியில் இருந்து 2,450 கி.மீ., 3,200 கி.மீ., 4,100 கி.மீ.,
,4,700 கி.மீ. மற்றும் 5,000 கி.மீ. உயரத்தில் பயணித்த போது இந்த படங்கள்
எடுக்கப்பட்டன. இந்த புகைப்படங்களை இஸ்ரோ நேற்று வெளியிட்டது.
பூமியை சுற்றி வரும் சந்திரயான்-2
விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையை அடுத்த கட்டமாக இன்றும் (திங்கட்கிழமை),
மறுபடி வருகிற 16-ஆம் தேதியும் உயர்த்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.
அதன்பிறகு விண்கலம் பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி நிலவின்
சுற்றுவட்ட பாதைக்குள் செல்லும். அதன்பிறகு நீள்வட்ட பாதையில் நிலவை சுற்றி
வரும் விண்கலம் ஆகஸ்டு 20-ஆம் தேதி சந்திரனை நெருங்கி அதன் அருகாமையில்
சுற்றிவரும்.
நிலவின் அருகாமையில் சந்திரயான்-2 விண்
கலம் தொடர்ந்து சுற்றி வர, அதில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின்
தென்துருவ பகுதியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ஆம் தேதி தரை இறங்கும்.
அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் என்ற சிறிய வாகனம் வெளியே
வந்து நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும்.
அதுபற்றிய தகவல்களை சந்திரயான்-2 விண்கலம் பூமிக்கு அனுப்பி வைக்கும்.
சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7-ந்
தேதி நிலவில் தரை இறங்கும் காட்சியை, பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின்
கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பிரதமர் மோடி பார்வையிட இருக்கிறார்.
அந்த காட்சியை பார்வையிடுவதற் காக ஒவ்வொரு
மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்து தலா 2 மாணவர்கள் தேர்ந்து
எடுக்கப் படுகிறார்கள். இதற் காக இஸ்ரோ, 8 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான
மாணவ- மாணவிகளுக்கு வருகிற 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஆன்லைன்
மூலம் வினாடி வினா போட்டி நடத்துகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாண
வர்கள் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரை இறங்கும் காட்சியை காணும்
வாய்ப்பை பெறுவார்கள்.
No comments:
Post a Comment