Monday, July 8, 2019

பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை: கனிமொழி எம்.பி. கண்டனம்

தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய புதிய அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் கூறுகையில், தமிழக மக்களின் வரிப்பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை. மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கிறது அதிமுக அரசு என பதிவிட்டுள்ளார்.

அரசு பேருந்தில் EMERGENCY, FIRE EXTINGUISHER  என்பது ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே உள்ளது என குறிப்பிட்டுள்ள கனிமொழி, தமிழக அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...