தூத்துக்குடியில் கடுமையானப் பாதிப்புகளை
ஏற் படுத்தி விட்டு, மாசு ஏற்படுத்த வில்லை என்ற ஒரே பல்லவியைத் திரும்பப்
பாடுவதாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மீது தமிழ் நாடு மாசுக்
கட்டுப்பாட்டு வாரியம் குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில்,
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா
நிறுவனம் வழக் குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும்
வனத்துறை மற்றும் வேதாந்தா நிறுவனம் சார்பில் பதில்மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம்,
பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்
தது. அப்போது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார் பில் ஆஜரான
மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தனது வாதத்தின்போது கூறியது:-
தூத்துக்குடியில் கடந்த 1996-ஆம் ஆண்டு
முதல் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பல்வேறு வகை யான மாசுகளை
ஏற்படுத்தியுள்ளது. இது பல்வேறு ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் மூலம் உறுதி
செய் யப்பட்டுள்ளன. கடந்த 2005-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம்
செய்யப்பட்டது. இதன் பின்னர் ஆலையால் ஏற் படும் மாசின் அளவு அதிகரித்துள்
ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு அக்டோபரில் ஆலையை இயக்க நிபந்தனைகளின்
அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. ஆலைக்கு சுற்றுச்சுழல் அனுமதி
வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, ஆலையி லிருந்து
வெளியேற்றப்படும் கழிவு கள் நவீன தொழில்நுட்பத்துடன் முறையாக
பராமரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என
ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த
உயர்நீதிமன்றம், ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய
சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி அமைப் பான நீரிக்கு உத்தரவிட்டது. அதன்
படி ஆய்வு மேற்கொண்ட நீரி, கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை
இரண்டு அறிக்கைகளைத் தாக்கல் செய்துள் ளது. அந்த அறிக்கைகளின் அடிப்
படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த 2010-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம்
உத்தரவிட் டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசா ரித்த
உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதை உறு திப்படுத்தி, நூறு
கோடி ரூபாய் அபராதம் விதித்தது. தூத்துக்குடி நகரத்தை சரி செய்ய முடியாத
அளவுக்கு கடுமையானப் பாதிப்பு களை ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற் படுத்தியுள்ளது.
அப்படியிருந்தும் மாசு ஏற்படுத்தவில்லை என்ற ஒரே பல்லவியை ஆலை நிர்வாகம்
தொடர்ந்து பாடி வருகிறது. ஆலை யில் இருந்த கழிவுக்குட்டையில் சல்பைடு,
மக்னீசியம் உள்ளிட்ட வேதிப் பொருள்கள் மாசுக்கட்டுப் பாட்டு வாரியம்
நிர்ணயித்த அளவை விட அதிகமாக இருந்ததை ஆய்வ றிக்கைகள் உறுதி செய்துள்ளன.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் விதிகளை முறையாக பின்பற்ற வில்லை. ஆலையை
மூடும்போது விதிக்கப்படும் ஒரு சில நிபந்தனை களை மட்டும் பூர்த்தி
செய்துவிட்டு, நீதிமன்றத்தில் ஆலையைத் திறக்க அனுமதி பெற்று விடுகிறது.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தற்போது ஆலை
நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது என்று கூறி வாதிட்டார். இதனை யடுத்து, வழக்கு
விசாரணையை இன்று வியாழக்கிழமைக்கு (ஜூலை 25) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தர
விட்டனர்.
No comments:
Post a Comment