Saturday, July 6, 2019

அதிர்ச்சி தகவல் : கடன் பாக்கி வைத்த மத்திய அரசு

நாடாளுமன்ற மக்களவையில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து மக்களவை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல், ரயில் களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக் கைளை எடுத்து வருவதாக தெரிவித்தார். அதில் முதல் கட்டமாக பிரீ மியம், மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே பொருத் தப்பட்டுள்ளன என்றும், இது வரை பயணிகள் ரயில்களில் 1,300 பெட் டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவித்தார். மேலும் ரயில்களின் 7,020 பெட் டிகளில், 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்த இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

மற்ற ரெயில் பெட்டிகளிலும் அடுத்தடுத்து கேமராக்கள் பொருத் தப்படும் என தெரிவித்தார். எண் ணெய் நிறுவனங்களிடம் டீசல் வாங்கியதற்காக, ரயில்வே துறை ரூபாய் 1,000 கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளது. அதில் இந்திய எண்ணெய் கழகத்துக்கு ரூ.1,037 கோடியும், பாரத் பெட்ரோலியத் துக்கு ரூ.154 கோடியும், ஹிந்துஸ் தான் பெட்ரோலியம் நிறுவனத் துக்கு ரூ.61 கோடியும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.115 கோடியும் செலுத்த வேண்டி உள்ளதாக மக்களவையில் அமைச் சர் பியூஸ் கோயல் தெரிவித்தார். இந்த கடன் பாக்கியை மத்திய அரசு விரைவில் செலுத்தும் என கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...