காலை உணவை தவிர்க் காமல் சாப்பிடுவது உடல்
ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமானதோ அதே போல் இரவு உணவும் இன்றி
யமையாதது. அதனை கால தாமதமாக சாப்பிடுவதோ அல்லது சாப்பிடாமல் தவிர்ப் பதோ
உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடும். செரிமான கோளாறு பிரச்சினைகளும்
ஏற்படும். வேறுசில பக்க விளைவுகளும் ஏற்படலாம்.
இரவில் தூங்கும்போதும் உடலில் உள்ள
கலோரிகள் எரிக்கப்படுகிறது. ஆரோக்கி யமான உணவு வகைகளை சாப்பிடுவதற்கும்,
தூக்கத்திற் கும் தொடர்பு இருக்கிறது. இரவில் சாப்பிடாமல் பட்டி னியாக
இருந்தால் தூக்கத் திற்கு இடையூறு ஏற்படும். கார்போஅய்ட்ரேட் கலந்த உணவுகளை
இரவில் சாப் பிடுவதை தவிர்க்க வேண்டும். எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவு
வகைகளையும் தவிர்த்து விடுங்கள்.
காய்கறிகள், சூப், சாலட் வகைகளை இரவில்
சாப்பிட வேண்டும். மஞ்சள், இஞ்சி, லவங்கப்பட்டை போன்ற மசாலா பொருட்கள்
சேர்க் கப்பட்ட உணவுகளையும் உட்கொள்ளலாம். அவை உடலில் உள்ள கொழுப்பை எரிக்க
உதவும். இரவு உண வுடன் சிறிது நெய் சேர்த்துக் கொள்வதும் நல்லது. நார்ச்
சத்து கொண்ட உணவுகளை இரவில் அதிகமாக சாப்பி டலாம்.
No comments:
Post a Comment