மத்திய அரசு வெளியிட்டிருக்கும் தேசியக்
கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக் கேட்புகளை மறைமுகமாக யாருக்கும்
தெரிவிக்காமல் மத்திய - மாநில அரசுகள் நடத்திவருகின்றன.
எனவே, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள
மாவட்ட கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரை நேரில் சந்தித்து,
ஏன் தேசியக் கல்விக் கொள்கை வரைவு ஆபத்தானது என்று நாம் கூறுகிறோம்
என்பதையும், அது தொடர்பான நம் கருத்துகளையும், தெளிவாக எழுதி, மாவட்ட
திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கருத்துருவாக வழங்கிட வேண்டுகிறோம்.
மாவட்ட அமைப்பு சார்பில் மட்டுமல்லாமல்,
தனிப்பட்ட முறையிலும் பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என்பதால், புதிய
தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்து தொடர்பாக தங்கள் மாற்றுக் கருத்துகளை
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பிற அமைப்புகள் சார்பிலும் வழங்க
ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக அரசிடம் கருத்துத் தெரிவிப்பதற்கான கடைசி நாள்: ஜூலை 25, 2019
இணையத்தில் கருத்துகளைப் பதிவு செய்ய: http://tnschools.gov.in/nep
மின்னஞ்சலில் பதிவு செய்ய:
scert.nep2019@gmail.com
மத்திய அரசிடம் கருத்துத் தெரிவிப்பதற்கான கடைசி நாள்: ஜூலை 31, 2019
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை
இணையதளத்தில் கருத்துகளைப் பதிவு செய்ய:
https://innovate.mygov.in/new-education-policy-2019 (இதற்கு புகுபதிகை -
login கோரப்படும். பதிவு செய்து அதன் பின் கருத்துகளைப் பகுதி வாரியாகத்
தெரிவிக்கவும்.)
- ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்),
- இரா.செந்தூர்பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)
- ச.அஜிதன், ஆ.பிரபாகரன், த.யாழ்திலீபன், நா.பார்த்திபன் (துணைச் செயலாளர்கள், திராவிட மாணவர் கழகம்)
No comments:
Post a Comment