Tuesday, July 23, 2019

பா.ஜ.க. சங்பரிவார் கூட்டத்தின் பரிதாப நிலை

இந்தியா முழுவதும் பா.ஜ.க. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இருந்தாலும், தமிழ்நாட்டில் அவர்களின் குதிகால் எலும்பும், நரம்பும் முறிந்தும், உடைந்தும் முடங்கி விட்டன. வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முகம் வெளுத்து விட்டார்கள்.
மக்கள் வெளியில் மார்தட்டி அவர்களால் பேசவே முடிய வில்லை. தொலைக்காட்சிகளில் அரட்டை அடித்தவர்கள் எல்லாம்கூட, தேர்தல் வெற்றிக்குப் பிறகு தடாலடியாக அவர்களால் பேச முடியவில்லை; ஒன்று கொடுத்து ஒன்பது அடி வாங்கினார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தில் ரூபாய் மதிப்பிழப்பைப் பற்றியோ ஜி.எஸ்.டி. பற்றியோ ஏன் மோடி உட்பட எவராலும் வாய்த் திறந்து பேச முடியவில்லை. 5 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகள் பற்றி எந்தத் தேர்தல் மேடையிலும் ஏன் மூச்சு விடவில்லை?
'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என்ற ஒன்றைப் பிடித்துக் கொண்டு, இராணுவத்தின் செயல்பாட்டை தங்களின் அரசியல் செயல்பாடாக நீட்டி முழங்கினார்கள்.
ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்னாச்சி - அண்ணாச்சி என்று சரமாரியாக எதிர்த் தரப்பிலிருந்து வினாக்கணைகள் கிளம்பி இடுப்பை முறித்துப் போட்டன.
வெற்றி பெற்றும் மகிழ்ச்சியைத் தமிழ்நாட்டில் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்ற பாதிப்புக்கு ஆளாகி விட்டனர்.
உரிய முறையில் பதில் சொல்ல முடியாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்ட பா.ஜ.க.வின் தமிழகத் தலைமை, தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.வினர் பங்கேற்க வேண்டாம் என்று கட்டளையிட்டு விட்டது.
இதற்கு முன்பும்கூட புதிய தலைமுறையில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு  இப்படி ஓர் அறிவிப்பு வெளி வந்தது  - தமிழக பிஜேபி தலைமையிடமிருந்து;   கொஞ்ச நாள் தாக்குப் பிடித்தனர். எல்லாத் தொலைக்காட்சிகளும் சகட்டுமேனிக்குப் பிழிந்தெடுத்த நேரத்தில் "சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி!" என்ற கணவன் போல வேறு வழியின்றி தாமாகவே வந்து கதவு தட்டி தொலைக்காட்சி விவாதங்களில் தலை காட்ட ஆரம்பித்தனர்.
மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பா.ஜ.க. இருக்கும் திமிரில் அரட்டைக் கச்சேரியே நடத்தினார்கள். தேர்தல் கொடுத்த பலத்த அடிக்குப் பிறகு தாக்குப் பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டனர்.
இப்பொழுது இன்னொரு வேலையில் இறங்கி இருக்கின்றனர். தமிழ்நாடு பிஜேபி, சங்பரிவார்க்கு எதிர் நிலையில் எரிமலையாக அனல் கக்குவதற்குக் காரணம் பெரியார் - திராவிட இயக்கத் தலைமை - திராவிடர் கழகம் - வீரமணி என்று அறிந்த நிலையில் அவர்களை நோக்கி நான்கு கால் பாய்ச்சலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.
பெரியார் சிலையைச் சேதப்படுத்திய காரணத்தால் வட்டியும், முதலுமாக வாங்கிக் கட்டினர்.
பெரியார் சிலையைச் சிறுமைப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். ஆசாமி, சிறையிலிருந்து பிணையில் வந்தாலே போதும் என்பதற்காக தன்னை மனநோயாளி என்று காட்டி மருத்துவச் சான்றிதழ் வாங்கி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்த ஆத்திரத்திற்கு எல்லாம் வடிகாலாக ஒதுக்கி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்மீதும், அவர்தம் குடும்பத்தினர் மீதும் அக்கப் போர்களையும், பழி கூறுதலையும், பொய் மூட்டைகளையும் வீசி எறியும் எச்சக்கலை வேலையில் இறங்கியுள்ளனர்.
வீரமணியின் குடும்பத்தினர் என்னை சந்தித்துப் பேசினர் என்று ஜெயேந்திர சரஸ்வதி பேட்டிக் கொடுக்கப் போய் வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் கொடுத்த நொடியில் சமாதானப் புறாவை அனுப்பித் தப்பிப் பிழைக்கப் பார்த்தார். ஆசாமி மரணம் அடைந்த நிலையில் வழக்கிலிருந்து உயிர் பிழைத்தார்.
இப்பொழுது அந்த வழியில், குறுக்கு வழியில் விளம்பரம் பெறுவதற்காக  அபாண்டமாகச் சேற்றை வாரி இறைக்கும் இழி தகை வேலையில் இறங்கியுள்ளனர்.
ராஜாவை எனக்குத் தெரியும். ஆனால் ராஜாவுக்கு என்னை தெரியாது என்பதுபோல, தி.க. தலைவர்மீது சேற்றை வாரி இறைத்தால் ஏதோ ஒரு வழியில் விளம்பரம் கிடைக்காதா என்ற கீழ்த்தரமான வேலையில் பூணூலை முடுக்கிக் கொண்டு கிளம்பியுள்ளனர்.
இதுபோலவே விபூதி வீர முத்துசாமிகளும், அணுகுண்டு அய்யாவுகளும் 'நிர்வாண' ஆட்டம் போட்டுக் கடைசியில் அடங்கிப் போனார்கள். அதே ஆசாமி தஞ்சைப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவருக்கு மாலை அணிவித்து மன்னிப்புக் கேட்ட நிகழ்வுகள் எல்லாம் உண்டு.
இவர்கள் பேசுமொழியில் பதிலடிகொடுக்க வெகு நேரம் ஆகாது. அதற்கு அளப்பரிய அறிவும் தேவைப்படாது. சமூக வலை தளங்களில் கழகத் தோழர்களே களத்தில் இறங்கத்தான் வேண்டும். அவர்களின் சாக்கடை நடையில் அல்ல. அறிவார்ந்த  பதிவு செய்திட!
ஓடிப் போய் திரும்பி வந்த சங்கராச்சாரியின் வண்டவாளங் களைத் தண்டவாளத்தில் ஏற்ற முடியாதா?
ஜெயேந்திர சரஸ்வதிபற்றி அனுராதா ரமணன் என்ன சொன்னார் என்பதைக் கூடுதல் குறைச்சலின்றி கொட்ட முடியாதா? காஞ்சிபுரம் மச்சேந்திர நாதர் கோயில் குருக்கள் பார்ப்பான் நடத்திய லீலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர முடியாதா? அந்த லீலைகள் நடத்தப்பட்ட தருணத்தில் மச்சேந்திரன் என்ன செய்து கொண்டிருந்தான் என்ற வினாவையும் எழுப்பலாமே!
அவர்கள் வேண்டுமானால் பொய்களை அவிழ்த்துக் கொட்ட வேண்டும். நமக்கோ உண்மைகளை சொல்லவே நேரமில்லை.
சங்கரமடம் போன்ற மூலத்தில் கை வைத்தால்தான் ஆசன துவாரத்தில் கழு ஏற்றிய மாதிரி இருக்கும். நாகரிகமாக உண்மையை எடுத்துச் சொல்ல முடியும். இதுவும் ஒரு திருப்பம்தான் சந்திப்போம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...