Friday, July 5, 2019

முஸ்லிம் பெண்களை கும்பலாக வல்லுறவுக்கு உள்ளாக்க வேண்டுமாம்!

பாஜக மகளிரணி பொறுப்பாளரின் காட்டுவிலங்காட்டித்தன கருத்து


முஸ்லிம் பெண்களை, இந்து சகோதரர்கள் கும்பலாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, தூக்கில் தொங்க விட வேண்டும் என்று பாஜக மகளிரணித் தலைவிஒருவர், முகநூலில் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ராம்கோலா நகர பாஜக மகளிரணியின் தலைவராக இருந்தவர் சுனிதா சிங் கவுர். இவர்அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் ஆட்சேபகரமான கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதாவது, இந்து சகோதரர்கள் தலா 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி, முஸ்லிம் தாய்மார்கள் மற்றும் பெண்களை தெருவில் வைத்து கும்பலாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க வேண்டும்; பின்னர், அவர்களை மற்றவர்கள் பார்க்கும் விதமாக தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று  இந்தியில் பதிவிட்டிருந்தார். இந்தியாவைப் பாதுகாக்க வேண்டுமானால், இதனைச் செய்தாக வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். சுனிதாவின் இந்த பதிவு, சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
அகமதாபாத் மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தீபால் திரிவேதி என்பவரும் சுனிதாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதனிடையே, திரிவேதிக்கு பதிலளித்துள்ள பாஜக மகளிரணியின் தேசியத்தலைவர் விஜயா ரகாத்கர், பாஜக மகளிர் அணி, இது போன்ற வெறுப்பு கருத்துகளை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அந்தப் பெண் நீங்கள் ட்வீட் செய்யப்படும் முன்னதாகவே கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என்று சமாளித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...