Saturday, July 6, 2019

புத்தகப் பையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்? பிரிட்டன் விஞ்ஞானிகள் விளக்கம்

பள்ளி மாணவர்கள் முதுகில் சுமந்து செல்லும் புத்தகப் பைகள், அவர்களது உடல் எடையில் 10 சதவீதத்துக்கும் மேல் இருக்கக் கூடாது என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அப்ளைடு எர்கோனாமிக்ஸ் அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

பள்ளிச் சிறுவர்கள் எடுத் துச் செல்லும் புத்தகப் பைகள் எந்த அளவு எடை கொண் டதாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆய்வில் லிவர் பூல் ஜான் மூரே பல்கலைக் கழக ஆய்வாளர்களுடன் இணைந்து ஸ்பெயின் நாட் டைச் சேர்ந்த கிரானடா பல் கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதற்காக, 49 ஆரம்ப நிலைப் பள்ளி மாணவர்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட னர்.

அவர்களிடம் முதுகில் சுமந்து செல்லும் பைகள் மட்டுமன்றி, சக்கரங்களின் உதவியுடன் இழுத்துச் செல் லும் பைகளும் அளிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

அந்த மாணவர்களை சுமை இல்லாமல் சாதார ணமாக நடக்கச் சொல்லியும், பிறகு முதுகுப் பைகளை சுமக் கச் செய்தும், அதனைத் தொடர்ந்து இழுவைப் பைகள் கொடுக்கப்பட்டும் அசைவழுத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த சோதனைகளின் முடிவின்படி, மாணவர்களின் உடல் எடையைப் போல் 10 சதவீதத்துக்கும் மேலான எடை கொண்ட முதுகுப் பைக ளையும், 20 சதவீதத்துக்கும் மேலான எடை கொண்ட சக்கர இழுவைப் பைகளையும் அவர்களிடம் தந்தால், அது அவர்களுக்கு பாதிப்பை ஏற் படுத்தும் என தெரிய வந் துள்ளது.

முதுகுப் பைகள் இருக்க வேண்டிய எடை குறித்து ஏற்கெனவே இதுபோன்ற ஆய் வுகள் நடத்தப்பட்டிருந்தா லும், இழுவைப் பைகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட் டுள்ளது இதுவே முதல் முறையாகும் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...