Wednesday, July 17, 2019

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம்




வாசிங்டன், ஜூலை 17- வெள்ளை இனத்தைச் சேராத 4 ஜன நாயக் கட்சி பெண் நாடாளு மன்ற உறுப்பினர்களை நாட்டை விட்டு வெளியேறு மாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவு சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

வெள்ளை இனத்தைச் சேராத அந்த 4 பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கள் குறித்து டிரம்ப் கூறிய இந்தக் கருத்து இனவாதத்தை வெளிப்படுத்துவதாக எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டி யுள்ளனர்.

இதற்கிடையே, டிரம்ப் பின் சுட்டுரைப் பதிவுகளுக்கு சம்பந்தப்பட்ட 4 பெண் நாடாளுமன்ற உறுப்பினர் களும் கண்டனம் தெரிவித் துள்ளனர். இதுகுறித்து வாசிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறியதா வது:

அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக டிரம்ப் இனவாத தாக்குதல் நடத்தி யுள்ளார்.

அவரது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள 4 பேரும் பெண்கள் என்பதும், வெள்ளை இனத்தைச் சேராதவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

அமெரிக்காவில் வெள்ளை இன தேசியவாதம் என்பது முதலில் தனியறை களிலும், பிறகு தொலைக் காட்சிகளிலும் பேசப்பட்டு வந்தது; தற்போது அது வெள்ளை மாளிகை வரை வந்துவிட்டது என்று அவர்கள் விமர்சித்தனர்.

4 ஜனநாயகக் கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர் களும் அமெரிக்காவை வெறுப்பதால்தான் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற லாம் என்று சுட்டுரையில் பதிவிட்டதாகவும், அது இன வாதக் கருத்து அல்ல எனவும் டிரம்ப் விளக்கமளித்துள் ளார். தாம் தெரிவித்த கருத்து சரியா, தவறா என்பதை வாக் காளர்கள் முடிவு செய்வார் கள் எனவும் அவர் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...