குழந்தைகளுக்கும் வருமா சர்க்கரை நோய்?
என்று பலர் கவலையுடனும் வியப்புடனும் கேட்பதுண்டு. எங்கள் கோவை மெடிக்கல்
சென்டர் மருத்துவமனையில் ஒரு வயதிலிருந்து இருபது வயதிற்குள் நானூறுக்கும்
மேற்பட்ட குழந்தைகள் டைப் ஒன் என்ற முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கபட்டு
சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார்கள். அறிகுறிகள் தெரியாமல் பல பெற்றோர்
குழந்தையை கோமா நிலை வரும் பொழுது தான் மருத்துவமனைக்கு கொண்டு வரு
வார்கள். அதற்குள் சர்க்கரை அளவு 500க்கு மேல் சென்று அமிலம் அதிகமாகி
உயிரை எடுக்கும் நிலைக்கு சென்றுவிடும்.
குழந்தைகளிடம் இருக்கும் சர்க்கரை நோயை நான்கு முக்கியமான அறிகுறிகள் காட்டிக்கொடுக்கும். அவை:
எடை குறைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல்,
பசி தாங்க முடியாத அளவுக்கு இருத்தல், வாய் அடிக்கடி உலர்ந்துவிடும்
அளவுக்கு தாகம். இந்த அறிகுறிகளில் எது இருந்தாலும் உடனடியாக மருத்துவரை
அணுகி குழந்தையின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ள
வேண்டும்.
குழந்தை இரவு நேரத்தில் அடிக்கடி அறியாமல்
சிறுநீர் கழித்து துணி மாற்ற வேண்டியிருந்தால் சர்க்கரை அளவை பார்ப்பது
நல்லது. பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி
தேவைப்படும்.
சிலர் அலோபதி மருத்துவமே ஏமாற்று வேலை
என்று "மூளை சலவை" செய்து இன்சுலின் ஊசி வேண்டாம் என்று சொல் வார்கள்.
மூலிகை, கீரை என்று மாற்று மருத் துவம் செய்யச் சொல்வார்கள். உயிருக்கே
ஆபத்தாய் முடிந்துவிடும்.
சர்க்கரை நோய் இருக்கும் என் குழந்தையின்
எதிர்காலம் பாதிக்கப்படுமா? திருமணம் நடக்குமா? போன்ற பல கவலைகள்
பெற்றோருக்கு வருவது இயல்பு. ஒழுங்காக இன்சுலின் ஊசி எடுத்துக்கொண்டு நல்ல
மருத்துவரின் மேற்பார்வையில் இருந்தால் எவரெஸ்ட் மலையையே ஏறலாம் என்று
கூறுவோம்.
இதோ செபாஸ்டியனின் கதை. வாழும் வரை
இன்சுலின் ஊசி போட்டேயாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் செபாஸ்டியன்.
முதலில் அவர் சோர் வடைந்தது உண்மைதான். ஆனால் சில மாதங்களிலேயே அந்தச்
சோர்விலிருந்து விலகிச் சீறிக்கொண்டு கிளம்பினார்.
“சர்க்கரை நோயாவது சேப்பங் கிழங்காவது!
எதுவந்தாலும் எவரெஸ்டைத் தொட வேண்டும் என்ற என் கனவை விடமாட்டேன்” என்று
தனக்குத் தானே சூளுரைத்துக்கொண்டார்.
அய்ந்து வருடங்கள் கடும் பயிற்சி மேற்
கொண்டார். 2008ஆம் ஆண்டு... முதல் வகை சர்க்கரை நோயுடன் எவரெஸ்ட்
சிகரத்தைத் தொட்ட முதல் மனிதர் என்று வரலாறு அவருடைய சாதனையைப் பதிவு
செய்தது. அவர் சொல்கிறார்:
“பெற்றோர்களே முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட உங்கள் குழந்தை களை கனவு காணச் சொல்லுங்கள்.
இந்த நோய் எனக்கு வரவில்லையென்றால் நான்
எவரெஸ்ட் சிகரத்தைத் - என் வாழ்க்கையின் உச்சத்தை - தொட்டிருப்பேனா என்பது
சந்தேகமே. நம்மால் முடியாதது எதுவுமில்லை”.
எங்களிடம் உள்ள பல டைப் ஒன் குழந்தைகளின் பெற்றோர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்.
இன்றும் இன்சுலின் மற்றும் இன்சுலின் பம்ப் போன்றவைகளை வாங்கமுடியாமல் ஏழை குழந்தைகள் இறக்கும் அவலங்களை காண்கிறோம்.
முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட
ஒரு குழந்தைக்கு கூட பணமில்லை என்ற காரணத்திற்காக சிகிச்சை
மறுக்கப்படக்கூடாது. அதனால் அந்தக் குழந்தை சாகக்கூடாது - இதுதான் நாங்கள்
நடத்தும் இதயங்கள் அறக்கட்டளையின் நோக்கம்.
தற்பொழுது 100 க்கும் மேற்பட்ட
குழந்தைகளுக்கு இன்சுலின், இன்சுலின் பம்ப் வாங்க, அவர்கள் கல்வி
போன்றவைக்கு இதயங்கள் அறக்கட்டளை கை கொடுக்கிறது.
மேலும் அறிய www.idhayangal.org
No comments:
Post a Comment