மூன்று மதகுகளை இயக்கி பரிசோதித்த துணைக்
கண்காணிப்புக் குழுவினர், பெரியாறு அணை பலமாக உள்ளதாக திருப்தி
தெரிவித்தனர்.பெரியாறு அணை துணைக் கண்காணிப்பு குழுவினர், கடந்த ஏப்ரல்
26ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 112.70 அடியாக இருந்தபோது ஆய்வு செய்தனர்.
தற்போது அணையின் நீர்மட்டம் 112.45 அடியாக
குறைந்துள்ள நிலையில், பெரியாறு அணையில் துணைக்கண்காணிப்பு குழுவினர்
நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து நேற்று மாலை குமுளியிலுள்ள பெரியாறு அணை
கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழு வின் ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது.கூட்டத்தில், வல்லக்கடவு பாதை சீரமைப்பு, பேபி அணையை
பலப்படுத்துவதற்கு அணைப் பகுதியில் உள்ள சில மரங்கள் வெட்டுவதற்கான
நடவடிக்கை மற்றும் அணைக்கு மின்சாரம் கொண்டு வருவதற்கான செயல் பாடுகள்
குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் துணைக்குழு தலைவர் சரவணபிரபு
கூறுகையில், ‘‘அணையில் கசிவுநீர் (சீப்பேஜ் வாட்டர்) அளவு கணக்கிடப்பட்டது.
நிமிடத்திற்கு 22.666 லிட்டர் என்ற
கசிவுநீர் நேற்றைய நீர்மட்ட அளவான 112.45 அடிக்கு மிகத்துல்லியமாக உள்ளது.
இதனால் அணை பலமாக உறுதியுடன் இருப்பது தெரிகிறது. மேலும் அணை யில் 3, 11,
13 ஆகிய மூன்று மதகுகள் இயக்கிப் பார்க்கப்பட்டது. மதகுகளின் இயக்கம்
சரியாக உள்ளது. தென்மேற்கு பருவமழை வலுக்கும்போது துணைக்குழுவின் அடுத்த
கூட்டம் நடைபெறும்’’ என்றார்.
No comments:
Post a Comment