Monday, July 8, 2019

சமஸ்கிருத மொழி கற்பிக்க 5 கிராமங்கள் தத்தெடுப்பாம்!

சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க கிராமங்களை தத்தெடுத்து சமஸ் கிருத கல்வி வழங் கும்படி ராட்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் கல்வி நிறுவனத் திற்கு மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

சமஸ்கிருதம் 3,500 ஆண்டு களுக்கும் மேலான பழமை யான மொழியாகும். இம் மொழியை மக்களிடையே வளர்க்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வரு கிறது. கடந்த மாதம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் மத்திய மொழி நிறுவ னங்களின் தலைவர்கள் கூட் டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச் சர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்'  தலைமை தாங்கி னார்,
அப்போது அவர் பேசுகை யில், ''சமஸ்கிருத மொழியை ஊக்குவிக் கும் மற்றும் பாது காக்கும் வகையில் மத்திய சமஸ்கிருத கல்வி நிறுவனங்க ளுக்கு அருகில் குறைந்தது இரண்டு சமஸ்கிருத மொழி பேசும் கிராமங்களையாவது உருவாக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ராட்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் கல்வி நிறுவனம் 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சமஸ்கிருதத்தை ஊக்குவிக்கும் நாட்டின் மூன்று மத்திய நிறுவனங்களில் ஒன்றான ராஷ்டிரிய சமஸ் கிருத சமஸ்தான் 5 கிராமங்களைத் தத்தெடுக்க ஒப்புக் கொண்டது. கிராமத்து மக்கள் சமஸ்கிருத மொழியில் உரையாட வைக்க முடியும் என்பதை உறுதிப் படுத்த நாடு முழுவதும் அய்ந்து கிராமங்களை தேர்ந் தெடுத்து அறிவித்துள்ளது. திரிபுராவில் ஜூபர்டா, இமாச்சல பிரதேசத்தில் மாஸ் கட், கருநாடகாவில் சிட்டெ பெயில், கேரளாவில் அடாட், மத்திய பிர தேசத்தில் பராய் ஆகிய கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வரையும் சமஸ்கிருதத்திலேயே உரையாட வைக்க முடியும் என்று உறுதி வழங்கியுள்ளது.

இது தவிர, லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடா மற்றும் திருப்பதி ராஷ்டிரிய சமஸ் கிருத வித்யாபீடம் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும் இரண்டிரண்டு கிராமங்களைத் தத்தெடுக்கும் பணி களில் ஈடுபடுமாறு மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் உத்தர விட் டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...