Sunday, July 21, 2019

தலைநகர் அமராவதி கட்டமைப்புக்கு நிதி ரூ.2000 கோடியை நிறுத்தியது உலக வங்கி

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர், தெலங்கானாவிற்கு அய்தரா பாத் நிரந்தர தலைநகரம் ஆனது. ஆனால், தலைநகரம் இல்லாமல் இருந்த புதிய ஆந்திர மாநிலத்திற்கு கிருஷ்ணா நதிக்கரையோரம் குண்டூர்-கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களுக் கிடையே அமராவதி எனும் புதிய தலை நகரை நிறுவ முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சி களை மேற்கொண்டார். இதற்கான நிலத்தை விவசாயி கள் தர முன் வந்தனர். அதன் பேரில் 33 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசுக்கு விவசாயிகள் வழங்கினர்.
இவர்களுக்கு நிலத்திற்கு அரசு மதிப்பிலான பணம் வழங் கப்பட்டது. மேலும், அமராவதி நகரம் உருவாகும் போது, நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வீடுகள் அல்லது வியாபாரம் செய்து கொள்ள போதிய இடம் ஒதுக் கித்தருவது எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த அமரா வதி பகுதியில் தற்காலிக சட்டப்பேரவை கட்டப்பட்டது. மேலும், ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் இருந்து நிபுணர் குழு வரவழைக்கப்பட்டு மாதிரி தலை நகரும் அதற்கான கட்டுமான இடங் களும் தீர்மானிக்கப்பட்டது. இந் நிலையில், சட்டப் பேரவைத் தேர் தலில், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை இழந்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானார்.
இதனிடையே, அமரா வதியை நிர்மாணிக்க விவசாயி களிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்களை பெற்றதாக சில ஆண்டுகளுக்கு முன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி உட்பட ஜனசேனா போன்ற கட்சி கள் மத்திய அரசிடம் முறை யிட்டன. அமராவதி யின் கட்ட மைப்புக்கு உலக வங்கி முதற் கட்டமாக 300 மில்லியன் டாலர் (ரூ. 2 ஆயிரம் கோடி) வழங்க இருந்தது.
இது குறித்து நேரடியாக ஆய்வும் செய்தது. இந்நிலையில், வலுக்கட் டாயமாக நிலங் கள் பெறப்பட்டதால், உலக வங்கி நிதிக்கு சிபாரிசு செய்யப் பட்ட கடிதத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதனை தொடர்ந்து ஆந்திராவிற்கு வர இருந்த ரூ. 2,000 கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டது.
எதிர்க்கட்சியாக இருந்த போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி செய்த புகார், தற்போது, அக் கட்சி ஆட்சியில் உள்ளபோது அதற்கு எதிராக திரும்பி ஆந்திராவுக்கு இழப்பை ஏற் படுத்தி உள்ளது. இதனை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக கண்டித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...