தமிழ் மொழியின் பழைமை
குறித்ததகவலுக்கு, தமிழை இழிவுபடுத்தும் விதத்தில் தமிழை விட
சமஸ்கிருதம்தான் பழைமையானது என 12ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெறச்
செய்திருப் பதை எப்படி சகிப்பது? இந்தஅரசு தமிழக அரசா? அல்லது
சமஸ்கிருதசர்க்காரா? என தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும்,
சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டா லின்
அவர்கள், 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள `தமிழ்
மொழியின்பழைமை குறித்த தகவ லுக்கு, தனது சுட்டுரை பக்கத்தில் பதிவு
வெளியிட்டுள் ளார். அவரின் சுட்டுரைப் பதிவு வருமாறு:-
எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? தமிழ்
2300 ஆண்டுகள் தான்பழமை வாய்ந்ததாம். ஆனால், சமஸ்கிருதமோ 4000 ஆண்டுகள்
பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறதுதமிழக அரசின் 12-ஆம் வகுப்பு
பாடப்புத்தகம். காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்?இது
தமிழக அரசா அல்லது சமஸ் கிருத சர்க்காரா? இவ்வாறு அவர் பதிவில்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment