குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள
சர்தார் சரோவர் அணையின் அருகே சர்தார் படேல் சிலை நிறுவப் பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான இச்சிலை ஒற்றுமைச் சிலை என அழைக்கப்படுகிறது. இந்த
வளாகத்தில் பழங்குடியினர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
அதற்காக மணல் அள்ளப்பட்டு நிலத்தை சமன் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த
மணல் அள்ளும் பணியில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக நர்மதா மாவட்ட
காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் இங்கிருந்து
அள்ளப்பட்ட சுமார் 4.5 மெட்ரிக் டன் எடையுள்ள மணல் திருடப்பட்டுள்ளதாக
கூறப்பட்டுள்ளது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இந்த மணல்
திருடப்பட்டது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது. இதன் மதிப்பு ரூ.7 கோடி
ஆகும்.
வழக்கமாக இதுபோல வழக்குகள் பதியும்போது
உடனடி யாக பெயர் தெரியாத நபர்கள் என குறிப்பிடப்பட்டு முதல் தகவல் அறிக்கை
பதியப்படும். ஆனால், தற்போது காவல்துறை நேரடியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள்
பெயருடன் முதல் தகவல் அறிக்கை தயாரிக்க எண்ணி யுள்ளது. சிலை தேர்வு முதல்
சிலையின் இறுதிப்பணிவரை ரிலை யன்ஸ் மற்றும் எஸ்ஸார், எல் அன் டி என்ற சில
முக்கிய நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் ஊழல்
நடந்தால் இந்த மூன்று நிறுவனங்களில் ஏதாவது ஒன்று பெறுப்பேற்கவேண்டும்.
ஆனால், மூன்று நிறுவனங்களுமே மோடியின் மிக நெருங்கிய நண்பர்களால்
நடத்தப்படும் நிறுவனங்கள் ஆகும். ஆகவே, இந்த ஊழல் விவகாரம் சில நாட்களில்
காணாமல் போய்விடும்'' என்று புகார் அளித்த பழங்குடியின சமுகத் தலைவர்கள்
கூறுகின்றனர்.
No comments:
Post a Comment