வீண் குப்பையாகப் போகும் பிளாஸ் டிக்கை
மறுசுழற்சி செய்ய, பல தொழில் நுட்பங்கள் வந்த படியே உள்ளன. இருந்தாலும்,
அவை மீண் டும் அதே பிளாஸ்டிக் பொருட் களை உருவாக்கு பவைகளாகவே இருக்
கின்றன.
ஒரு மாறுதலுக்கு, குறைந்த அடர்த்தி உள்ள
பாலியெத்திலின் குப்பையை, ஜெட் விமானங்களுக்கு எரிபொருளாக ஆக்கும், புதிய
தொழில்நுட்பத்தை, வாசிங்டன் மாநில பல்கலைக் கழக விஞ்ஞானிகள்
உருவாக்கியுள்ளனர்.
குறைந்த அடர்த்தியுள்ள பிளாஸ்டிக்
குப்பையை அரைத்து குருணைகளாக ஆக்கி, பிறகு அதை தங்கள் சிறப்பு முறைப்படி
பதப்படுத்தினர். இதன் பின், அந்தக் கழிவு, 85 சதவீதம் ஜெட் விமான
எரிபொருளாகவும், 15 சதவீதம் டீசலாகவும் மாற்றப்பட்டன.
தாங்கள் உருவாக்கிய இந்த புதிய முறையில்
பிளாஸ்டிக் கழிவுகள், 100 சதவீதம் எரிபொருளாக மாற்றப்படும் என, விஞ்ஞானிகள்
உறுதியாக உள்ளனர்.
இந்த புதுமை, 'அப்ளைடு எனர்ஜி' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment