சென்னை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் கிண்டியில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி ஆலந்தூர்
சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் ஜூன் 28-ஆம்
தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் 35-வயதுக்குட்பட்ட 8-ஆம்
வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, அய்.டி.அய்., பட்டயப் படிப்பு, கலை
மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை
உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உள்பட) கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார்
துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு
ஆள்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்தச் சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என
அதில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment