வாக்குக்கு பணம் கொடுப்பது, வாக்குச் சாவடியை கைப்பற்றுவது நிரூபணமானால், தேர்தலை ரத்து செய்யவோ, தள்ளிவைக்கவோ தங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விடுத்த வேண்டுகோளை மோடி அரசு 4 முறை நிராகரித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணை யத்திடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் பெறப்பட்டன.
இதில்தான் வாக்குக்குப் பணம் கொடுத்தாலோ, வாக்குச் சாவடியைக் கைப்பற்றினாலோ அந்த தொகுதியில் வாக்குப் பதிவை ரத்து செய்யவோ, தள்ளிவைக்கவோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வேண்டும் என 4 முறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு நிராகரிக்கப் பட்டுள்ளது தெரிய வந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கருக்கு அப் போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜெய்தி கடிதம் எழுதினார். அதே ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை மத்திய அரசும், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாதும் நிராகரித்து விட்டனர்.
இதுதவிர, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா மற்றும் புதுச்சேரி, அசாமில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 175.53 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 52 லட்சம் லிட்டர் அளவுள்ள ரூ. 24 கோடி மதிப்புள்ள சாராயமும்,ரூ.12 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதும், தகவல் அறியும் உ.ரிமை சட்டத்தில் கிடைத்த ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இந்தியாவின் அனைத்து சுதந்திர அமைப் பையும் விழுங்கிவிட்ட பிரதமர் மோடிக்கு இறுதியாக தேர்தல் ஆணையம் மட்டும் எம் மாத்திரம்!
பிஜேபியைச் சேர்ந்த கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்த நிலையில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலோடு நடப்பதாக உடனடியாக தேர்தல் ஆணையம் அறிவித்தது எப்படி? தமிழ்நாட்டில் இடைத் தேர்தல், நடத்த வேண்டிய தொகுதிகளில் பல மாதங்களைக் கடந்தும், இதுவரை அவற்றிற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லையே ஏன்?
இதன்மூலம் மக்களின் நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையம் இழந்துவிடவில்லையா? இதன் பின்னணியில் மோடி தலைமையிலான மத்திய ஆட்சியின் அரசியல் 'திருவிளையாடல்' ஒளிந்திருக்கிறது என்று சாதாரணகுடிமகன் கூட தேநீர்க்கடைகளிலும், பேருந்து நிலையங்களிலும் பேசும் பொருள் ஆகிவிட்டதே!
இந்த நிலை ஏற்பட தேர்தல் ஆணையம் இடம் கொடுக்கலாமா?
ஜனநாயகம் என்ற முகமூடியோடு, ஒரு பாசிச ஆட்சி கால் பதிக்க ஆரம்பித்துவிட்டது. இந்தத் தேர்தலில் இந்த ஆட்சியை ஒழிக்காவிட்டால், அனுபவம் முதிர்ந்த தலைவர்கள் சொல்வது போல இதுதான் கடைசித் தேர்தலாக இருக்கும் - எச்சரிக்கை!
No comments:
Post a Comment