தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் மத்திய மண்டல ஆணையர் தலைமையிலான தேர்தல் பறக் கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது நாராயண்குடா கிளை இந்தியன் வங்கியில் இருந்து ரூ.8 கோடி ரொக்க பணம் எடுக்கப்பட்டு ஒரு காரில் எடுத்து வரப்பட்டதாக தகவல் கிடைத் தது.
உடனே பறக்கும் படையினர் நாராயண்குடா காவல்துறையினருடன் விரைந்து சென்று கிமாயத்யகார் சந்திப்பில் மடக்கி சோதனை நடத்தினர். அந்த காரில் ஓட்டுநர் குடாசங்கர் மற்றும் தோஷரெட்டி, பிரதீப் ரெட்டி ஆகிய 3 பேர் இருந்தனர்.
அவர்களிடம் ரூ.2 கோடி ரொக்கப்பணம் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பணம் பா.ஜ.க. வுக்கு சொந்தமானது என்றும், நாராயண்குடா கிளை இந்தியன் வங்கியில் இருந்து நந்திராஜு கோபி என்பவர் தங்களிடம் கொடுத்ததாகவும், பிரதீப் ரெட்டி தெரிவித்தார்.
உடனே வங்கிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த கோபி உள்ளிட்ட 4 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ6 கோடி கைப்பற்றப்பட்டது. மொத்தம் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப் பட்டது.
இதுகுறித்து தெலங்கானா மாநில பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் கிருஷ்ணா சாகர் ராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் பா.ஜ.க. வுக்கு சொந்தமானது. எங்களது கணக்காளர் கோபி கட்சி அலுவ லகத்துக்கு அந்த பணத்தை எடுத்து வரச் சென்றார்.
ஆனால் காவல்துறையினர் காரை வழிமறித்து கார் கதவின் கண்ணாடியை உடைத்து பணத்தை கைப்பற்றியுள்ளனர். இது சட்ட விதிமீறல் ஆகும். வங்கியில் பணம் எடுத்ததற்கான ஆதாரம் உள்ளது. அதை காட்டியும் பறிமுதல் செய்துள் ளனர்” என்றார்.
No comments:
Post a Comment