அன்னையார் அவர்களின் இந்த நூற்றாண்டில் (2019-2020) கீழ்க்கண்ட அறிவிப்புகளை தமிழர் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டார்.
அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி பெரியார் மணியம்மை ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. பலரும் இதற்கு நன்கொடைகளை அளித்து வருகின்றனர். இதற்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு 50 விழுக்காடு வரி விலக்கு (80G) கிடைக்கும். அன்னையார் அவர்களுக்கு தந்தை பெரியார் எழுதி வைத்திருந்த சொத்துக்கள், அன்னை மணியம்மையாரின் சொத்துகளை உள்ளடக்கிய அறக்கட்டளை ஒன்றினை அன்னை மணியம்மையார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் இருந்தபோது உருவாக்கினார்.
மேனாள் சட்டமன்ற செயலாளர் சி.டி. நடராசன், சென்னை பொது மருத்துவமனை கண்காணிப்பாளர், தந்தை பெரியாரின் தனி மருத்துவர் டாக்டர் கே. இராமச்சந்திரா, சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் நெ.து. சுந்தரவடிவேலு, வழக்குரைஞர் கோ. சாமிதுரை, மேட்டூர் டி.கே. இராமச்சந்திரன் ஆகியோர் சாட்சி கையொப்பமிட்டனர். 1974 செப்டம்பரிலேயே பெரியார் மணியம்மை கல்வி அறப் பணிக் கழகம் என்று சட்டதிட்ட விதிகளுடன் பதிவு செய்யப்பட்டது.
அன்னையார் அவர்களின் நூற்றாண்டையொட்டி லால்குடி வட்டத்தைச் சேர்ந்த தச்சன்குறிச்சி என்னும் ஊரில் ஓர் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட உள்ளது. அதே போல வேலூர் லத்தேரியில் உள்ள உயர்நிலைப் பள்ளியை இந்த நிறுவனம் தத்தெடுக்கும் என்று அறிவித்துக் கொள்கிறோம் (பலத்த கரஒலி).
1919-1920 கல்வியாண்டில் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்புக்குச் சேரும் இருபால் மாணவர்களுக்கும் முதலாண்டில் முதல் செமஸ்டரில் கல்விக் கட்டணம் (டுயூஷன்ஃபீஸ்) கட்டுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அன்னை மணியம்மையார் பிறந்த இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தைத் தங்களின் சொந்த கல்வி நிறுவனமாகக் கருத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம். தந்தை பெரியார் அவர்களுக்கு இந்த மருத்துவமனையில் தான் டாக்டர் பட் அவர்கள் 5 மணி நேரம் அறுவை சிகிச்சைகள் செய்தார் என்பதை நினைவு கூர்கிறோம் என்றார். விழா மேடையில் அன்னை மணியம்மையார் பவுன்டேஷனுக்கு நிதி அளித்தனர்.
No comments:
Post a Comment