மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் உயர் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நியமனம் குறித்த தகவல் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' (2.6.2018) ஏட்டில் வெளியாகியுள்ளது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் 2005இன் கீழ் நூறு நாள் வேலைத் திட்டமாக 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்' 2005 (என்ஆர்ஜிஇஏ) காங்கிரசு தலைமையிலான மத்திய அரசில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
2005ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய வேலைவாய்ப்பு உத்தரவாத கவுன்சில் அமைக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் உள்ள அனைவருக்கும் நூறு நாள்கள் வேலையை உறுதிப்படுத்துவதற்கான வேலைஉத்தரவாத சட்டம் 2005அய் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க குழு ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
அக்குழுவில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களை அனைத்து மாநிலங்களிலும் நியமித்து வருகிறது.
'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்' 2005இன் கீழ் நூறு நாள் வேலைத்திட்டத்தைக் கண்காணிப்பது மற்றும் நடைமுறைப்படுத்தும் பணிகளை கவுன்சில் உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும். கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஆர்.எஸ்.எஸ். ஏடான பாஞ்சன்யா இதழாசிரியர், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் மற்றும் ஒரு தொழில்நிறுவன தலைமைச் செயல் அலுவலர் ஒருவர் உள்பட பலர் கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அலுவல் சாரா உறுப்பினர்களாக பல்வேறு மாநிலங்களிலும் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய வேலைவாய்ப்பு உத்தரவாத கவுன்சில் உறுப்பினர்கள் நியமனம்குறித்த அமைச்சக அறி விப்புக்கு எதிராக கடந்த மாதத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தற்போதைய கவுன்சில் குழு ஓராண்டில் காலாவதியாகும் நிலையில், கவுன்சிலில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உறுப்பினர்களின் பணிக்காலம் 20.6.2018 முதல் ஓராண்டுக்கு இருக்கும்.
டில்லியில் அலுவல் சாரா உறுப்பினராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வார ஏடான பாஞ்சன்யாவின் ஆசிரியர் ஹிதேஷ் சங்கர் கவுன்சிலில் பொறுப்பு வகித்து வருகிறார். அவர்தான் கடந்த ஆண்டில் கவுன்சிலின் பணிகளில் முக்கிய பங்காற்றியவர்.
ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் ஆசீஷ் கவுதம் தொடங்கிய திவ்ய பிரேம் சேவா மிஷன் நிறுவனம்போல் தனி நிறுவனமான டிவைன் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் எனும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உத்தர்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சதுர்வேதி என்பவரை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்நிறுவனங்கள் அரித்துவாரில் உள்ள சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனப் பட்டியல்களில் இடம் பெற்றுள்ளதுடன், கார்ப்பரேட் நிறுவன பங்குதாரர்களாகவும் உள்ளவையாகும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவரான ஏக்நாத் ரானடேவால் தொடங்கப்பட்ட இந்து ஆன்மிக அமைப்பாகிய விவேகானந்தா கேந்திரா அமைப்பைச் சேர்ந்த ஜி.வாசுதேவ் கன்னியாகுமரியிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளார். இந்து தேசம் அமைப்பதற்கான ஆலோசனைக்கான அழைப்பு எனும் தலைப்பில் கூட்டத்தை கடந்த ஆண்டு ராஜஸ்தானில் அவர் நடத்தியதாக அதன் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது.
கவுன்சிலின் உறுப்பினராக சுதிர் அகர்வால் நியமிக் கப்பட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்தவரான சுதிர் அகர்வால் தன்னார்வ நிறுவனங்களின் கூட்டமைப்பின் நிறுவனத் தலை வரான தன்னைப்பற்றிக் கூறுகையில், இளமைக்காலந்தொட்டே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் (சுயம் சேவக்காக) இருந்துள்ளதாகக் கூறுகிறார். அகர்வால் ஒரு வழக்குரைஞராக சாமியார் ராம்தேவின் வழக்கில் வாதாடியதை தன்னுடைய முக்கிய பணிகளில் ஒன்றாக கூறியுள்ளார். அமைச்சக அறிவிப்பில் தன்னார்வ நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவராகவே அவரைக் குறிப்பிட்டுள்ளது.
கவுன்சில் உறுப்பினராக விக்ஷூத் முண்ட்கர் என்பவரை அமைச்சகம் நியமித்துள்ளதாக அறிவிப்பில் கூறியுள்ளது. இவர் பெங்களூருவைச் சேர்ந்த ஹூவி ஏர் டெக்னாலஜிஸ் பிரைவேட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும், கூட்டு நிறுவனரும் ஆவார். புனேவைச் சேர்ந்த பிரிமூவ் இஞ்சினியரிங் நிறுவனத்தின் இயக்குநர் சந்தோஷ் ரகுநாத் கொண்டாலேகர். விவசாய கழிவுகளிலிருந்து பையோகாஸ் பிரித்தெடுக்கும் நிறுவனத்தின் இயக்குநர் ஆவார்.
இவரைப் போன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர்கள், பெரும் தொழிலதிபர்கள் ஆகியோரை அலுவல் சாரா உறுப்பினர்களாக அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை கவுன்சில் உறுப்பினர்களாக, அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிப்பதற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பரிந்துரை செய்துள்ளார்.
கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்படும் இவர்கள் அனைவரும் மாநிலங்களின் பிரதிநிதிகளாகவும், பஞ்சாயத்ராஜ் அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் கூடுதலாக செயல்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
கவுன்சில் உறுப்பினர்களாக தொடக்கத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அருணா ராய், ஜீன் டிரேஸ், நிகில் டே போன்ற பொருளாதார வல்லுநர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள்தான் வேலை உத்தரவாத சட்ட விதிமுறைகள், கண் காணிப்பு பணிகளை நடைமுறைப்படுத்துவது என்று பிப்ரவரி 2006இல் சட்டம் தொடங்கப்பட்டபோது பணியாற்றியவர்கள் ஆவர். இப்பொழுது எல்லாம் தலைகீழ்தான்!
மத்திய பாஜக அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின், உயர் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரையே நியமித்துள்ளது அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வம் ஆர்.எஸ்.எஸ். மயமே!

No comments:
Post a Comment